MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகம் கூலிப்படை கூடாரமாகிறதா? வானதி சீனிவாசன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகம் கூலிப்படை கூடாரமாகிறதா? வானதி சீனிவாசன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகம் கூலிப்படை கூடாரமாகிறதா? வானதி சீனிவாசன் கேள்வி

தமிழ்நாடு

தமிழகம் கூலிப்படை கூடாரமாகிறதா? வானதி சீனிவாசன் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 15, 2026 7:08 மணி
Fernandez
Share
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்
SHARE

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், மாநிலம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூலிப்படையினரின் அட்டகாசம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது அவர்கள் கொலைகள் மற்றும் கொடுங்குற்றங்களை சர்வ சாதாரணமாக அரங்கேற்றி வருகின்றனர். இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்குச் சென்றுவிட்டதையே காட்டுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர், சினிமா படப்பிடிப்புக்குச் செல்வது போல லண்டன் சென்று அங்கு ரீல்ஸ் பதிவிட்டு வருவதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் கொலைகளாலும், பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மையாலும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இத்தகைய சூழலில், முதல்வர் விஜய் தனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல செயல்படுவது கடும் அதிருப்தியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"உங்கள் நண்பர்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் நீங்கள் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா தமிழக முதல்வர் அவர்களே? வெறும் அறிக்கைகளை வெளியிடுவதால் மட்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகாது," என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தி, கூலிப்படையினரையும் ரவுடியிசத்தையும் ஒழித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முதல்வர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPChengalpattu MurderCM VijayContract KillersTamil Nadu Law and OrderWanathi Srinivasanகூலிப்படைசெங்கல்பட்டு கொலைதமிழக சட்டம் ஒழுங்குபாஜகமுதல்வர் விஜய்வானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கழிப்பறையின் அடிப்பகுதியைச் சுற்றி பேக்கிங் சோடா தூவப்படுகிறது இரவில் இதைச் செய்தால் கழிப்பறை துர்நாற்றம் மாயமாகும்!
Next Article இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஐபிஎல் ஏலத்தை ஒழிக்க வேண்டும்: புவனேஷ்வர் குமார் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மேஜையில் பரிமாறப்பட்ட ஆட்டிறைச்சி உணவு
தமிழ்நாடு

மட்டன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான தகவல்கள்!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலருக்கும் மட்டன் பிரியாணி அல்லது மட்டன் குழம்பு என நினைவுக்கு வரும். அப்படி மட்டன் வாங்கச் செல்லும் முன், அதன் நன்மைகள் குறித்து தெரிந்து…

2 Min Read
கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு அடுக்கப்பட்டுள்ள வெங்காயம்
தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை 71% உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

லண்டன் பயண செலவு விவரங்களை வெளியிடுக: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் பயண செலவு விவரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

2 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்
தமிழ்நாடு

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்: மீனவர் வாழ்வாதாரம் அழிப்பு – ஸ்டாலின் கண்டனம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம். மீனவர் வாழ்வாதாரம் அழிப்புக்கு எதிர்ப்பு, போராட்டங்களுக்கு முழு ஆதரவு என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?