MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் முதல்வர் ஆவதை தடுத்தேனா? – ரஜினிகாந்த் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் முதல்வர் ஆவதை தடுத்தேனா? – ரஜினிகாந்த் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் முதல்வர் ஆவதை தடுத்தேனா? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ்நாடு

விஜய் முதல்வர் ஆவதை தடுத்தேனா? – ரஜினிகாந்த் விளக்கம்

Admin
Last updated: மே 17, 2026 6:58 மணி
Admin
Share
SHARE

சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதை தடுக்கும் வகையில் ரஜினிகாந்த் செயல்படுவதாகவும், திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் விஜய் குறித்தும், திமுக-அதிமுக கூட்டணி முயற்சி குறித்தும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதற்கு நான் விடை கொடுக்காவிட்டால் அது உண்மையாகி விடும். இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை இப்போது அளிக்கிறேன்" என்றார்.

"தேர்தல் முடிவு வந்தவுடன் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அது பெரும் விமர்சனம் ஆகிவிட்டது. மு.க. ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். எங்களது நட்பு, கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். இருந்தாலும் கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் நட்பு அடிப்படையில் அவரை சென்று சந்தித்தேன். உடனே விஜய் முதலமைச்சராக கூடாது. அதை தடுக்க தான் ரஜினி, மு.க. ஸ்டாலினை சந்தித்தார், வேறு இரண்டு பெரிய கட்சிகளை இணைக்கவும் திட்டமிடுகிறார் என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். இது போன்ற சூழ்நிலையில் இப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படி பேசும் அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் கிடையாது. அதை தற்போது தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்று விளக்கினார்.

மேலும், விமான நிலையத்தில் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "விஜய் முதலமைச்சரான உடனே எனது எக்ஸ்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். 2016-ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று நான் சொன்னது முதல் விமான நிலையத்திற்கு சென்றால் மீடியா இருக்கிறார்களா என்று கேட்டு வைத்துக் கொள்வேன். அப்படித்தான் இந்த முறையும் கேட்டு சென்றேன். ஆனால் மீடியா யாரும் வரவில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் செல்போனில் வீடியோ எடுத்தபடி ஒருவர் என்னிடம் வந்து, ‘விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டாரே’ என்று கேட்கிறார். எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அவரைப் பார்த்தால் மீடியா மாதிரி தெரியவில்லை. நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள். விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் பேசுகிறார்கள். நான் அரசியலில் இல்லை. அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியலில் நான் இல்லாதபோது விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. எனக்கும், விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். என்னுடன் விஜய்யை ஒப்பிடுவது சரியாகாது. அதேபோல் அவருடன் என்னை ஒப்பிடுவதும் சரியாக இருக்காது. சிறிய வயதில் இருந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் முதலமைச்சராவதில் எனக்கு ஏன் பொறாமை. அரசியலில் சிறிய வயதில் அதாவது 52 வயதில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல சாதனை படைத்திருக்கிறார். மத்திய மாநில அரசுகளை தாண்டி தனி ஆளாக சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் ஜெயித்திருக்கிறார்.இதில் எனக்கு என்ன பொறாமை இருக்கப் போகிறது. இது சந்தோஷம் கலந்த ஆச்சரியம் தான். எனவே எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நிறைய எதிர்பார்ப்புகள் தான் இருக்கிறது அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாற்றம் தேவை என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள். விஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன். இது வரை முதலமைச்சர் பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர் விருப்பப்பட்டு அழைத்ததின் பெயரில் தான் நான் அந்த விழாவுக்கு சென்றேனே தவிர அழைப்பிதழ் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7SuperstarTamil Nadu Politicsஅரசியல்ரஜினிகாந்த்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!
Next Article அபுதாபி அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: தீ விபத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்…

ஆகஸ்ட் 16, 2026

குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள்…

ஆகஸ்ட் 16, 2026

மணிப்பூர் நெடுஞ்சாலைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மணிப்பூரில் குகி-நாகா சமூக மோதலால் முடங்கிய தேசிய…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் பழ. நெடுமாறன்
தமிழ்நாடு

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ. நெடுமாறன் பேட்டி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும், உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
ரேஷன் கடை
தமிழ்நாடு

ரேஷன் கடைகள் வேலை நேரம் மாற்றம்? ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் வசதியைக் கருத்தில்…

2 Min Read
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள 'மனுவுடன் வாருங்கள், பணத்துடன் அல்ல' என்ற அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

லஞ்சம் ஒழிப்பு: மனுவுடன் வாருங்கள், பணத்துடன் அல்ல!

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க புதிய முயற்சி: மனுவுடன் வாருங்கள், பணத்துடன் அல்ல! - முதல்வர் விஜய் அரசு நடவடிக்கை.

2 Min Read
திருச்சி பேருந்து நிலையத்தில் காவல்துறை விசாரணை
தமிழ்நாடு

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் 4 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாநகரில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?