MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் ரூ.15,300 கோடி முதலீடு: 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் ரூ.15,300 கோடி முதலீடு: 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் ரூ.15,300 கோடி முதலீடு: 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.15,300 கோடி முதலீடு: 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

Fernandez
Last updated: செப்டம்பர் 15, 2026 4:59 மணி
Fernandez
Share
தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் லண்டனில் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் காட்சி
தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் லண்டனில் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
SHARE

லண்டனில் தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் பயணத்தின்போது, சுமார் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், கடந்த 14.9.2026 அன்று இங்கிலாந்தின் லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும் பல்வேறு முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே இந்த முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தையும் வழங்கியுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் முதலீடுகள் குறித்து அக்குழுமத்தினர் முதலமைச்சரிடம் விளக்கினர். வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் நோக்கக் கடிதங்கள் மூலம் ரூ.15,300 கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்நிறுவனம், தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L) சார்ந்த வசதிகளை நிறுவி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் கிடைக்கும். இது சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் மாநிலத்தின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.

வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்தணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் திறனை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் அதிகரிக்கும்.

மேலும், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கி, 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க ஆதரவளிக்கும்.

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே தேர்ந்தெடுப்பதாக விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த முதலீட்டைச் சாத்தியமாக்க தமிழ்நாடு அரசு அனைத்து ஆதரவையும் உறுதியளித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோரும் முதலமைச்சரைச் சந்தித்தனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Guidance TamilNaduSamvardhana Motherson InternationalWilson Power Solutionsச.ஜோசப் விஜய்தமிழக முதலமைச்சர்முதலீடுகள்லண்டன் பயணம்வேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மண்டாடி திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு மண்டாடி படகு பயணம்: 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல்!
Next Article கழிப்பறையை சுத்தம் செய்யும் வினிகர் பாட்டில் வாராந்திர கழிப்பறை பராமரிப்பு: வினிகர் பயன்பாடு குறித்த எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

குட்கா கடத்தல் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார்
தமிழ்நாடு

குட்கா கடத்தல்: இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்

குட்கா கடத்தியவர்களிடம் முறையான விசாரணை நடத்தாமல், ஆதாயம் பெறும் நோக்கில் அவர்களை விடுவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காட்சி
தமிழ்நாடு

திருச்சி ரயில் சேவையில் மாற்றம்: பராமரிப்பு பணி தீவிரம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இப்பகுதி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்தை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 Min Read
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு அறிக்கை
தமிழ்நாடு

ஆகஸ்ட் மிக வெப்பம்: செப்டம்பரில் மழை குறைவு, வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 125 ஆண்டுகளில் இல்லாத வெப்பமான மாதமாக பதிவான நிலையில், செப்டம்பரில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. 'எல்…

2 Min Read
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் டீசர் வெளியீடு
தமிழ்நாடு

சர்தார் 2 டீசர் வெளியீடு: நல்ல வில்லனா? கெட்ட ஹீரோவா? – எதிர்பார்ப்பு அதிகரிப்பு

நடிகர் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் டீசர் வெளியானது. நல்ல வில்லனா அல்லது கெட்ட ஹீரோவா? என்ற கேள்வியுடன் வெளியான டீசர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?