தினமும் வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக, முடி உதிர்வு மற்றும் பொடுகுத் தொல்லைக்கு வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வெந்தயத்தில் உள்ள புரதச்சத்து மற்றும் நிக்கோடினிக் அமிலம், முடி உதிர்வதைத் தடுத்து, பொடுகில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை மைய அரைத்து தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு, முடி வலுப்பெறும். மேலும், வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து அரைத்து தலையில் பூசினால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி பளபளப்பாக மாறும்.
வெந்தயத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. இருதய நோய்கள், மூட்டுவலி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதை தினமும் ஊறவைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியே தண்ணீருடன் விழுங்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அவர்களின் அன்றாட உணவில் வெந்தயத்தை ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். வெந்தயத்தை பொடித்து மோருடன் கலந்து அருந்தலாம். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனை உள்ள பெண்களும் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
வெந்தயக்கீரையையும் சமைத்து உண்ணலாம். இது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். வெந்தயக்கீரையில் போலிக் அமிலம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் வெந்தயம் சாப்பிடுவதால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கும். மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள டிரைகிளசரைட் எனும் கொழுப்பை இரத்தத்தில் கலக்காமல் பாதுகாக்கும். வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
