MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகளிர் ஆசிய கோப்பை: மோஷின் நக்வி – இந்திய அணி மோதல் மீண்டும் வெடிக்குமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகளிர் ஆசிய கோப்பை: மோஷின் நக்வி – இந்திய அணி மோதல் மீண்டும் வெடிக்குமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - மகளிர் ஆசிய கோப்பை: மோஷின் நக்வி – இந்திய அணி மோதல் மீண்டும் வெடிக்குமா?

விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை: மோஷின் நக்வி – இந்திய அணி மோதல் மீண்டும் வெடிக்குமா?

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 7, 2026 9:53 காலை
Sri Prem Kumar R
Share
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள் கோப்பையுடன் கொண்டாடும் காட்சி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
SHARE

துபாயில் நடைபெறவுள்ள 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியின் பரிசளிப்பு விழாவில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்விக்கும் இடையே மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறுதிப்போட்டிக்கு மோஷின் நக்வி தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்த பாகிஸ்தான் அமைச்சரான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். இந்த மோதல் காரணமாக, இந்திய அணி கோப்பை இல்லாமலேயே மேடையில் வெற்றியை கொண்டாடியது. அந்த கோப்பை இன்றும் துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதே போன்ற ஒரு சூழ்நிலை மகளிர் ஆசிய கோப்பையிலும் உருவாகியுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, குரூப் சுற்றில் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி, இதுவரை தோல்வியே அடையாமல் கம்பீரமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால், இந்திய அணியே இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றால், தலைமை விருந்தினராக பங்கேற்கும் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கருத்துக்களை மோஷின் நக்வி தொடர்ந்து கூறி வந்ததால், அவரிடமிருந்து கோப்பையைப் பெறுவதை இந்திய வீராங்கனைகள் தவிர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், இந்த சர்ச்சை மீண்டும் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

முன்னதாக, ட்ரை சீரீஸ் பைனலில் தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேவை வீழ்த்தி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asia CupIndia CricketPakistan Cricketஇந்திய அணிகிரிக்கெட்பாகிஸ்தான்மகளிர் ஆசிய கோப்பைமோஷின் நக்வி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை
Next Article த.வெ.க. கட்சி அலுவலகம் அல்லது கட்சி கொடி த.வெ.க. உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சிகளை கலைக்க திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல்

திருப்பதி உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3.81 கோடி வசூலாகியுள்ளது.…

நவம்பர் 23, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அமைச்சர்

புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்…

நவம்பர் 23, 2026

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து!

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். 'இங்குதான் தவறு நடந்துவிட்டது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் ஃபீபா தடை
விளையாட்டு

அர்ஜென்டினா வீரர்களுக்கு ஃபீபா அதிரடி: 90,000 டாலர் அபராதம், 10 போட்டிகள் தடை!

2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது நடந்த மோதல்களுக்காக அர்ஜென்டினா வீரர்களான பரேடஸ், மோலினா ஆகியோருக்கு ஃபீபா 90,000 டாலர் அபராதம் விதித்து, 10 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி பாடம்: திலக் வர்மா விளக்கம்

இளம் வீரர் திலக் வர்மா, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி குறித்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பேட்டிங்கை விட கேப்டன்சி பற்றி அதிகம் பேசுவதாக…

1 Min Read
சுனில் கவாஸ்கர் மற்றும் அஜிங்கியா ரஹானேவின் கிரிக்கெட் தொடர்பான கருத்துக்கள்
விளையாட்டு

ரஹானேவின் கேப்டன்சிக்கு உரிய அங்கீகாரம் இல்லை: கவாஸ்கர்

அஜிங்கியா ரஹானேவின் கேப்டன்சி திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் தலைமைத்துவத்தைப் போலவே, ரஹானேவின் சிறந்த கேப்டன்சியும் தகுந்த பாராட்டைப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?