MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பமின்றி நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பமின்றி நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பமின்றி நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பமின்றி நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

Fernandez
Last updated: செப்டம்பர் 6, 2026 1:31 மணி
Fernandez
Share
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
SHARE

குளறுபடிகளுக்கு இடமளிக்காமல், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மக்களின் உரிமைகளைக் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், OBC பிரிவினரைக் கணக்கிடுவதற்கு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பட்டியல் அல்லது தரப்படுத்தப்பட்ட மெனு இல்லாமல், சாதி விவரங்களைப் பதிவுசெய்யும் 'open-ended format' முறையை மத்திய அரசு பயன்படுத்தவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

OBC பட்டியலில் இடம்பெறுபவை வகுப்புகளே தவிர, அவை சாதிகள் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கினால் மட்டுமே குழப்பங்களைத் தவிர்க்க முடியும்.

மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவு செய்வது குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதனால் இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் அபாயம் உள்ளதை அரசு புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமே, பட்டியலின மக்களின் எண்ணிக்கையைப் போலவே, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். இதன் மூலமே, அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் தங்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கம் நிறைவேறும் என்று ஸ்டாலின் விளக்கினார்.

தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பு வீணடிக்கப்படும். இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

எனவே, பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி தவறுகளை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடமளிக்காமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறும் வகையில் திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Caste CensusDMKMK StalinOBCOBC CensusTamil Nadu Assemblyசாதிவாரி கணக்கெடுப்புதமிழ்நாடு சட்டமன்றம்மக்கள் தொகை கணக்கெடுப்புமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டீ வடிகட்டியை சுத்தம் செய்யும் முறை டீ வடிகட்டி அடைப்பு நீங்க: எளிய வீட்டுக்குறிப்பு!
Next Article சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யும் நபர் சுவிட்ச் போர்டு அழுக்கை அகற்ற எளிய டிப்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க உள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை எதிரொலி: 'இந்தியா' கூட்டணி அடுத்த…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்: 6 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து, 5 பேர் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அடுத்தடுத்து…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் வண்ணமயமான பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன.
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் வண்ணமயமான சர்வதேச பட்டம் விடும் திருவிழா

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பங்கேற்று வண்ணமயமான பட்டங்களை பறக்கவிட்டனர். பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

2 Min Read
தமிழ்நாடு

திமுகவில் அதிரடி மாற்றம்: ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி அமைப்பு முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், கோஷ்டி அரசியலை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1 Min Read
மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி
தமிழ்நாடு

நேர்மையான அதிகாரிகளை நீக்கும் தவெக அரசு: ஜோதி நிர்மலாசாமியின் பதவி விலகல்?

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியை பதவி விலகக் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இது அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளுக்கு எதிரானது என…

2 Min Read
சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையாளர்
தமிழ்நாடு

மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

சென்னையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் திரு. ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பணிகளை துரிதப்படுத்தவும், பருவமழைக்கு முன்பே முடிக்கவும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?