MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > 50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!
சினிமா

50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!

Admin
Last updated: May 16, 2026 1:31 pm
Admin
Share
SHARE

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 'அன்னக்கிளி' திரைப்படம் வெளியாகி அரை நூற்றாண்டைக் கடந்த நிலையில், அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, தனது இசைப் பயணம் குறித்தும், ரசிகர்களின் அன்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தற்போது இயக்குநர் பால்கி இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருவதாகக் கூறிய இளையராஜா, 'வருடம் தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர, நான் எங்கு இருந்து எப்படி வந்தேனோ, அப்படியே தான் இருக்கிறேன். எல்லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்பது பற்றி கேட்கிறீர்கள். அது, அவர்களின் அன்பைக் காட்டுகிறது. நான் இசையமைக்கும் போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. வெறுமையாகவே இருக்கும். கோயிலுக்குப் போவதை விட இசை மிகவும் புனிதமானது. அதனால்தான் மக்கள் என்னை என்னென்னவோ சொல்லிக் கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும்' என்று குறிப்பிட்டார்.

'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்துப் பேசுகையில், 'ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் நான் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தேன். சுமார் 250 படங்களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்கென்று பட வாய்ப்பு வந்தபோது, எப்படிப் பாடலைத் தொடங்குவது? என்று யோசித்துப் பார்த்தேன். மற்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய போது எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை. ஆனால், எனக்கென்று வந்தபோது பல யோசனைகள் வந்தது. என்னைத் தனிக்காட்டில் விட்ட மாதிரி இருந்தது. 'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என பாடல் வரிகளை எழுதிவிட்டார்கள். பீச்சில் நடந்து கொண்டே பாடலுக்கான இசையை எப்படித் தொடங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெண்ணின் விரகதாபத்தை இந்தப் பாடல் சொல்கிறது என்ற எண்ணத்தில், ஒரு ஹம்மிங்கை வைத்தேன். இதற்காகப் பல நாட்கள் யோசித்தேன். பிறகு எங்கு ஷாட் வைக்கப் போகிறார்கள் என்று யோசித்து இசை அமைத்தேன். ஒவ்வொரு பாடலையும் இப்படி இசை அமைத்துக் கொடுத்ததால்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இயக்குநர் பால்கி, கே. பாக்யராஜ், பாடலாசிரியர் பா. விஜய் ஆகியோர் இளையராஜாவுடன் உடனிருந்தனர். 50 ஆண்டுகால இசைப் பயணத்திலும், ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பது இளையராஜாவின் இசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:50 YearsAnnakiliIlayarajaMusicஅன்னக்கிளிஇசைஇளையராஜா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Hero Xtreme 125R: ஸ்டைல், மைலேஜ், விலை – இளைஞர்களை கவரும் பைக்!
Next Article ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

சினிமா

பிருத்விராஜ் நடிக்கும் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' (The Goat Life) திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் பென்யாமின் எழுதிய புகழ்பெற்ற…

1 Min Read
சினிமா

RJ பாலாஜிக்கு கார் பரிசளித்த சூர்யா: ‘Ride போலாமா’ நிகழ்ச்சி

நடிகர் சூர்யா, பிரபல வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜிக்கு 'Ride போலாமா' நிகழ்ச்சியின் போது புதிய காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

1 Min Read
சினிமா

ரூ.2,400 கோடி மோசடி: நடிகை சன்னி லியோனுக்கு சிஐடி நோட்டீஸ்

மும்பையில் ரூ.2,400 கோடி மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனுக்கு சிஐடி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
சினிமா

ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘சிஸ்டம்’. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இவர் தமிழில் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?