MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆட்சியில் ஜீரோவாக இருப்பது வெட்கமாக இல்லையா? – அப்பாவு கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆட்சியில் ஜீரோவாக இருப்பது வெட்கமாக இல்லையா? – அப்பாவு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆட்சியில் ஜீரோவாக இருப்பது வெட்கமாக இல்லையா? – அப்பாவு கேள்வி

தமிழ்நாடு

ஆட்சியில் ஜீரோவாக இருப்பது வெட்கமாக இல்லையா? – அப்பாவு கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 27, 2026 6:54 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், வழிப்பறி என பல்வேறு குற்றச் செயல்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு தவெக நிர்வாகிகள், சென்னை காசிமேடு தவெக நிர்வாகி பாம்பு தினேஷ், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி என்ற பிரகாசம், சேலம் தவெக பிரமுகர் மணிகண்டன், சென்னை ஆலந்தூர் தவெக நிர்வாகி வேம்புலி, மதுரை கீழமாத்தூர் தவெக நிர்வாகி கண்ணன், சேத்துப்பட்டு தவெக நிர்வாகி யோகேஷ்வரன், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் தவெக நிர்வாகி தியாகு என நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதுதான் தமிழக பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் சிங்கப்பெண் பாதுகாப்பா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மோசடி மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்ட திருச்செந்தூர் தவெக நிர்வாகி ராஜா, தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி ராம்குமார், சேலம் சங்ககிரி அருகே கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி பூபதிராஜா, வேலூரில் 1 இலட்சம் கேட்டு மிரட்டிய தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மூதாட்டியிடம் 3 சவரன் வழிப்பறி செய்த தவெக பிரமுகர் கௌதம், புதுக்கோட்டையில் 15 கோடிக்கு மேல் மோசடி செய்த தவெக சரவணன் என தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களால் தூய ஆட்சியை நடத்துகிறீர்களா? என்றும் அவர் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக ஆட்சி அமைந்தது முதல் நாட்டில் நடைபெற்று வரும் குற்றச் செயல்களில் 50% மேல் ஈடுபட்டு வருபவர்கள் 30 வயதிற்குட்பட்ட தவெக நிர்வாகிகளும் விஜய் ரசிகர்களும் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் திரைப்படங்களில் விஜய் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பார்த்து, வாழ்க்கையிலும் அப்படிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருவதை பார்த்து ரசிக்கிறீர்களா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினரை கண்டித்து திருத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்வருக்கு உண்டு என்பதை மறந்து, திரையில் 'ஹீரோவாகவும்' ஆட்சியில் '#ஜீரோவாகவும்' இருப்பது வெட்கமாக இல்லையா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அப்பாவுகொலைகொள்ளைதமிழக அரசுதவெகபாலியல் குற்றங்கள்முதலமைச்சர்வழிப்பறிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவர் கோரிக்கை மனுவை அளிக்கும் காட்சி எல் நினோ: IMD நிபுணர் நியமனம் – CPI வலியுறுத்தல்
Next Article மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ஜன் தன் திட்டம் குறித்த அறிவிப்பு ஜன் தன் திட்டம்: 59.09 கோடி வங்கிக் கணக்குகள் திறப்பு – மத்திய அரசு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐதராபாத் பாலாப்பூரில் ஏலம் விடப்பட்ட விநாயகர் லட்டு

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற லட்டு ஏலத்தில், 21 கிலோ…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யை முதலீட்டு மையமாக மாற்றிய யோகி அரசு – அமித் ஷா புகழாரம்

மாஃபியாக்களின் பிடியில் இருந்த உத்தரப் பிரதேசத்தை, முதலீடுகளை…

செப்டம்பர் 25, 2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது உச்ச நீதிமன்றத்தில் மனு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை நடைபாதை திட்ட டெண்டர் ரத்து: ரூ.284 கோடி முறைகேடு அம்பலம்!

சென்னை மாநகராட்சியில் 284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டிருந்த நடைபாதை அமைக்கும் பணிக்கான 35 டெண்டர்கள், செலவை செயற்கையாக உயர்த்தி காட்டியது உள்ளிட்ட முறைகேடுகள் அம்பலமானதையடுத்து ரத்து…

2 Min Read
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள்
தமிழ்நாடு

எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் தற்காலிக மாற்றங்கள்; தெற்கு ரயில்வே வருத்தம்

சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பயணிகள் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிரமத்திற்கு தெற்கு ரயில்வே வருத்தம் தெரிவித்துள்ளது.

4 Min Read
நடிகர் சிம்பு நேபாள வெள்ள பாதிப்பு குறித்து வருத்தம் தெரிவிக்கும் பதிவு
தமிழ்நாடு

நேபாள வெள்ளம்: நடிகர் சிம்பு ஆழ்ந்த அனுதாபம்

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பால் 157 பேர் உயிரிழந்தனர், 37 தமிழர்கள் காணாமல் போயினர். நடிகர் சிம்பு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

1 Min Read
விபத்தில் உயிரிழந்த கடை உரிமையாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை கோர்ட்டு
தமிழ்நாடு

விபத்தில் பலியானவருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு

சாலையோரத்தில் எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்யாமல் நிறுத்தப்பட்ட லாரியால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?