MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறி?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறி?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறி?

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறி?

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 27, 2026 6:24 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி
SHARE

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இது இந்தியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஃபாலோ-ஆன் கொடுத்த பிறகும் இந்திய அணியால் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சோனல் தினுஷா ஆட்டத்தை டிரா செய்ய முக்கிய காரணமாக அமைந்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 1997-க்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சோனல் தினுஷா படைத்தார். இதன் மூலம் ஆட்டத்தை டிரா செய்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை இலங்கை தடுத்து நிறுத்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதற்குப் பதிலளித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தனர்.

முதல் இன்னிங்ஸில் 162 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த தினுஷா, இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தலாக விளையாடி 264 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் 12 புள்ளிகளைப் பெற்றிருக்கலாம். மேலும் அவர்களின் புள்ளி வெற்றி சதவீதம் 63.33 ஆக உயர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்க முடியும்.

ஆனால், இந்த டிரா காரணமாக இந்தியாவும் இலங்கையும் தலா நான்கு புள்ளிகளை மட்டுமே பகிர்ந்து கொண்டன. இதன் விளைவாக, இந்திய அணியின் புள்ளி 53.33 சதவீதத்தில் இருந்து 51.51 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அவர்கள் WTC தரவரிசையில் தொடர்ந்து 5-வது இடத்திலேயே நீடிக்கின்றனர். மறுபுறம், இலங்கையின் PCT 33.33 சதவீதமாகவும், அவர்களின் 6-வது இடமும் எந்த மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கிறது.

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற அபார வெற்றி, அவர்களின் PCT-ஐ 80 ஆக உயர்த்த உதவியதுடன், தரவரிசைப் பட்டியலில் அவர்களின் முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்கா 75 சதவீத PCT உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளது. அதன்பிறகு, நவம்பர் மாதத்தின் மத்தியில் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் இந்திய அணி தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடும். தற்போதைய WTC சைக்கிளில் இந்தியாவிற்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளும் அடங்கும்.

இதில் இந்திய அணி 6 போட்டிகளாவது வெல்ல வேண்டும். இதனால் இந்தியாவின் தகுதி வாய்ப்பு பறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவை போலவே இலங்கை அணியும் தனது அடுத்த டெஸ்ட் போட்டியை நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. தற்போதைய சைக்கிளில் இலங்கைக்கு இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricket News TamilIND vs SLWTC Standingsஇந்திய கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட் அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்சோனல் தினுஷா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகர் துல்கர் சல்மான் நடித்த 'ஐ அம் கேம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு துல்கர் சல்மான் ‘ஐ அம் கேம்’ படத்தின் புதிய பாடல் வெளியானது
Next Article சாம்சங் கேலக்ஸி S25 ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி S25: அமேசானில் அதிரடி சலுகை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காஷ்மீரில் சுற்றுலா சென்றபோது ஹோட்டல் கிடைக்காமல் காரில் தங்கிய குடும்பம்

காஷ்மீரில் இல்லாத ஹோட்டலில் முன்பதிவு: குளிரில் தவித்த குடும்பம்

காஷ்மீரில் இல்லாத ஹோட்டலில் முன்பதிவு செய்து ஏமாந்த வழக்கறிஞர் ராஜேஷ் சோஹன், கடுங்குளிரில்…

செப்டம்பர் 26, 2026

ஹைதராபாத்தில் விநாயகர் ஊர்வலம்: ரூ.39 லட்சத்திற்கு லட்டு ஏலம்

ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

செப்டம்பர் 26, 2026

தேர்தலுக்குப் பின் 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல்: நாகலாந்தில் உச்சம்

இந்தியாவில் தேர்தலுக்குப் பின் 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்…

செப்டம்பர் 26, 2026

அடுத்த 6 மாதங்களில் மத்திய அரசு வாங்கப்போகும் கடன் எவ்வளவு?

வரும் ஆறு மாதங்களில் மத்திய அரசு பத்திரங்கள்…

செப்டம்பர் 26, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

தமிழகத்திற்கு 4 ஆயிரம் கன அடி நீர்…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக தடுமாறும் இங்கிலாந்து: 222 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. மேட் ஹென்றியின்…

2 Min Read
விளையாட்டு

கோலி சிறந்த ஃபீல்டர் இல்லை – ஜாண்டி ரோட்ஸ் கருத்து

இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டர் விராட் கோலி இல்லை என ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், கோலியின் அதீத ஆக்ரோஷம் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்
விளையாட்டு

சஞ்சு சாம்சன் தானாக விலகல்: வைபவ் சூர்யவன்ஷி அறிமுகத்திற்கு வழி

மான்செஸ்டர் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமான விவகாரத்தில் புதிய திருப்பம். சஞ்சு சாம்சனே தானாக முன்வந்து அணியிலிருந்து விலகியதாகத் தகவல்.

2 Min Read
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை வென்ற கொண்டாட்டம்
விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: 7வது முறை ஆஸ்திரேலியா சாம்பியன்!

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெத் மூனி, ஷிவர்-பிரண்ட், கெம்ப் சிறப்பான ஆட்டம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?