MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Admin
Last updated: மே 16, 2026 6:29 காலை
Admin
Share
SHARE

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை தொடர்பாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் தலைமையில் இந்த சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், சட்டவிரோதமாக பார்கள் நடத்தியவர்கள் மற்றும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் என மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையின் போது, சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வேளச்சேரி 100 அடி சாலையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார் மூடப்பட்டு, அதன் ஊழியர்களான பிரபாகரன் (32), சபரிமுத்து (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக இயங்கிய பார் மூடப்பட்டு, கார்த்திக் (36), பிரபாகரன் (40), கணேசா (61), வாஞ்சி நாதன் (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை அருகே சில்லறையாக மதுபானம் விற்ற நீதி (38), ராஜபாண்டி (42), ரகுபதி (38), லட்சுமணன் (46) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொண்டித்தோப்பு அம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டு, ஊழியர் மாரியப்பன் (65) கைது செய்யப்பட்டார். பிராட்வே தபால் அலுவலகம் சாலை, புது வண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெரு, பாரதியார் நகர் பகுதிகள் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு, ரகு (32), அமுல்ராஜ் (60), ராஜமாணிக்கம் (57) ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியார் மதுபாரில், அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை நடைபெற்றதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பார் உரிமையாளர் கார்த்திக் இளம்பழுதி மற்றும் மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பார் மூடப்பட்டது. சென்னை நகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடைபெறும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai crimeTamil Nadu Newsசட்டவிரோத பார்கள்சென்னைபோலீஸ் நடவடிக்கைமதுபான விற்பனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
Next Article நெதர்லாந்து சென்றடைந்தார் மோடி: உறவுகளை வலுப்படுத்தும் முக்கியத்துவம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை…

2 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும்…

1 Min Read
நடிகர் அல்லு அர்ஜுன் மேடையில் பேசுகிறார்
தமிழ்நாடு

அல்லு அர்ஜுனின் ரசிகர் நலத் திட்டம்: ரூ.5 லட்சம் காப்பீடு அறிவிப்பு!

நடிகர் அல்லு அர்ஜுன், ரசிகர்களின் நலனுக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளார். சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

வாழ்க்கையில் 2 பெரும் தவறுகள் செய்தேன்: வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்க்கையில் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணியை பெரும் தவறுகள் என குறிப்பிட்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?