MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளி முதல்வர் கொடூர கொலை: 27 முறை குத்திய மாணவர்கள் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளி முதல்வர் கொடூர கொலை: 27 முறை குத்திய மாணவர்கள் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பள்ளி முதல்வர் கொடூர கொலை: 27 முறை குத்திய மாணவர்கள் கைது

தமிழ்நாடு

பள்ளி முதல்வர் கொடூர கொலை: 27 முறை குத்திய மாணவர்கள் கைது

Fernandez
Last updated: ஆகஸ்ட் 21, 2026 6:37 காலை
Fernandez
Share
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள்
கைது செய்யப்பட்ட மாணவர்கள்
SHARE

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி முதல்வர் மற்றும் இயக்குனருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12 ஆம் தேதி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், இருவர் சமீபத்தில் அதிக பணம் செலவழித்ததும், நண்பர்களுக்கு விருந்து அளித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இரு மாணவர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ரூபா ரெட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், ரூபா ரெட்டியின் கண்டிப்புக்கு ஆளானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் இருவரும் விடுதியில் அதிக பணம் மற்றும் மொபைல் போன்களை வைத்திருந்ததை ரூபா ரெட்டி கண்டுபிடித்தார். இது தொடர்பாக அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, அந்த மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி, வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களாக மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும், ரூபா ரெட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐந்து நாட்கள் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கும் முயற்சியில் சிக்காமல் இருக்க கையுறைகள், கத்தி, முகமூடி போன்றவற்றை மாணவர்கள் வாங்கியுள்ளனர். கொலை நடந்த நாளில், ஒரு மாணவர் கையுறைகள் மற்றும் முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். மற்றொரு மாணவர் வெளியே நின்று நோட்டமிட்டுள்ளார். படுக்கையறையில் இருந்த சுமார் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றபோது, மாணவரின் தொப்பி கீழே விழுந்துள்ளது. இதை கண்ட ரூபா ரெட்டி அவரை அடையாளம் கண்டுள்ளார். தங்களை போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விடுவார் என பயந்த மாணவர், சக மாணவருடன் சேர்ந்து ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருட்களை புதைத்துவிட்டு, கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி உள்ளனர். கொண்டமல்லேபள்ளியில் உள்ள டோனியாலா கூட்டு சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, பைக்கில் வந்த இருவரும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1.54 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் கொலை செய்யப்பட்ட பள்ளி முதல்வர் ரூபா ரெட்டியின் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kallu Roopa ReddyNalgondaStudents ArrestedTelangana School Principal Murderகல்லு ரூபா ரெட்டிதெலுங்கானாநல்கொண்டாபள்ளி முதல்வர் கொலைமாணவர்கள் கைது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை: செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
Next Article வரலட்சுமி தேவியை அலங்கரித்து பூஜை செய்யும் பெண்கள் வரலட்சுமி பூஜை: ஆகஸ்ட் 21ல் விரதம், பூஜை நேரம், முக்கியத்துவம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜஸ்தான் அரசு பள்ளி கட்டிடம்

ராஜஸ்தான்: 2500 பள்ளிகள் சிதிலம், 300 பள்ளிகளுக்கு கட்டிடமே இல்லை!

ராஜஸ்தானில் 2500 அரசு பள்ளிகள் சிதிலமடைந்தும், 300 பள்ளிகளுக்கு கட்டிடங்களே இல்லாமலும் உள்ள…

ஆகஸ்ட் 22, 2026

நாய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

செங்கல்பட்டு அருகே நாய்க்கு பயந்து ஓடிய 5…

ஆகஸ்ட் 22, 2026

வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸ் செயற்குழு முடிவுக்கு பாஜக கண்டனம்

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை…

ஆகஸ்ட் 22, 2026

பாஜகவின் புதிய வியூகம்: ஜென் ஸி தலைமுறையை கவர உயர்மட்ட குழு அமைப்பு

பாஜக, ஜென் ஸி தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

திருவள்ளூர் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயதுடைய இரு சிறுமிகளும் அடங்குவர்.

1 Min Read
பழனி முருகன் கோவில்
தமிழ்நாடு

பழனி கோவில் நில மோசடி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பழனி முருகன் கோவில் நிலம் தொடர்பான 100 கோடி ரூபாய் மோசடி புகாரில், பத்திரப்பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

2 Min Read
பேசும் இளைஞர் மற்றும் அருகில் பெண்
தமிழ்நாடு

மனைவி இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் இளைஞர் செய்த காரியம்!

மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக பேசிய இளைஞர், அவரின் பேச்சை பதிவு செய்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார்.

1 Min Read

காமராஜர் பிறந்த நாள்: அண்ணாமலை வேண்டுகோள்

திருப்பூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பேசிய வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பரப்புரை செய்ய மாணவர்களை வலியுறுத்தினார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?