MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீர்நிலைகள் மீட்பு: ராமதாஸின் அவசர கோரிக்கை – அரசுக்கு அதிரடி வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நீர்நிலைகள் மீட்பு: ராமதாஸின் அவசர கோரிக்கை – அரசுக்கு அதிரடி வலியுறுத்தல்!
தமிழ்நாடு

நீர்நிலைகள் மீட்பு: ராமதாஸின் அவசர கோரிக்கை – அரசுக்கு அதிரடி வலியுறுத்தல்!

Admin
Last updated: May 15, 2026 12:07 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் நிலவும் கடும் கோடை வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மத்திய நீர்வள அமைச்சகத்தின் முதல் நீர்நிலைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள 1,06,957 நீர்நிலைகளில் சுமார் 50,197 நீர்நிலைகள், அதாவது 46.9% நீர்நிலைகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். பாதிக்கு நெருக்கமான நீர்நிலைகள் வறட்சி, தூர்ந்து போதல், உவர்தன்மை போன்ற காரணங்களால் செயலிழந்து கிடப்பது மாநிலத்தின் எதிர்கால நீர் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்த வறட்சியான கோடை காலத்தை ஒரு இக்கட்டான சூழலாக மட்டும் பார்க்காமல், இழந்த நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக தமிழக அரசு கருத வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கும் இந்த நேரத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதும் எளிதான காரியம். எனவே, வரவிருக்கும் பருவமழை காலத்திற்கு முன்னதாக, பயன்பாட்டில் இல்லாத இந்த 50,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு 5,000 சிறுபாசனக் குளங்களைப் புனரமைக்கத் திட்டமிட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள 14,141 பெரிய பாசன ஏரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஊரணிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. 2026-27 ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் நீர் மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடைக்கோடி கிராமத்தில் உள்ள நீர்நிலைகளையும் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வெறும் டெண்டர் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ளூர் தொழிலாளர்களை முழுமையாகப் பயன்படுத்தி, நீர்நிலைகளின் வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் காக்கும் உயிர்நாடிப் பணியாகும். ஆகவே, தமிழக அரசு உடனடியாகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய நீர்வள மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வரும் பருவமழை காலத்தில் பெய்யும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தத் தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் இந்த மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:PMKTamil Nadu Water BodiesWater Scarcityதமிழக செய்திகள்நீர்நிலைகள்ராமதாஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!
Next Article தொழில் வளர்ச்சி: முதல்வர் விஜய் ஆலோசனை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

‘முதல்வர் ஆவார்’ என கணித்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தற்போது விஜயின் ஆலோசகரா? – ஒரு பார்வை.

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர் ஒரு ஜோதிடராவார், முன்னாள்…

3 Min Read
தமிழ்நாடு

திமுக திட்டங்கள் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழக சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக திட்டங்கள் தொடரும் என முதலமைச்சரே கூறியது தமது வெற்றி என்றார்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை…

1 Min Read
தமிழ்நாடு

பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?