MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர் திறப்பு: பாஜக நாடகத்தை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர் திறப்பு: பாஜக நாடகத்தை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி நீர் திறப்பு: பாஜக நாடகத்தை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு: பாஜக நாடகத்தை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 16, 2026 11:33 காலை
Fernandez
Share
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
SHARE

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் பாஜக அறிவித்துள்ள அணை முற்றுகை போராட்டங்கள் ஒரு நாடகம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு உரிய அளவு தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ள நிலையில், கர்நாடக அரசு கபினி ஆற்றில் இருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.

ஆனால், இந்த மாதத் தொடக்கத்திலேயே எடியூரப்பா மற்றும் விஜேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜக தலைவர்கள் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது எனப் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது சட்டப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்து பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுக்க நடக்கும் வன்மமும், தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது.

பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி சுமத்துவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தாலும், தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல், நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல், இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா? தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா?

பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன. கர்நாடக அரசு உரிய நீரைத் திறக்காததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் பாஜக அறிவித்துள்ள அணை முற்றுகை நாடகம், காவிரி நீர் விவகாரத்தில் அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் பாஜகவின் செயல்களைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPCauvery WaterKarnatakaManickam TagoreTamil Nadu Congressகர்நாடகாகாவிரிதமிழ்நாடு காங்கிரஸ்பாஜகமாணிக்கம் தாகூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டம் ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் வரலாற்று வெற்றி: 9 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை!
Next Article ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்த காட்சி ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து மீண்டும் உயர்வு: விவசாயிகளுக்கு ஆறுதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் மோடி செங்கோட்டைக்கு செல்லும் வழியில் அவரைச் சூழ்ந்து நிற்கும் விலங்குகள் மற்றும் மயில்கள்

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர் வாசலை நெருங்கும் முன்பே விலங்குகளும்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்…

ஆகஸ்ட் 16, 2026

குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (ஜூன் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960 ஆகவும்…

1 Min Read
சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் eKYC செயல்முறையைக் குறிக்கும் படம்
தமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டர்: eKYC கட்டாயம் – ஆக.16 கடைசி நாள்

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம். ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் நிறைவு செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஆன்லைன் அல்லது ஷோரூம் மூலம் eKYC…

1 Min Read
உயிரிழந்த அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு

போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 Min Read
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவது
தமிழ்நாடு

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: பொறியியல் பணி

பொறியியல் பணிகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கவனத்திற்கு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?