MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக கலகம்: இபிஎஸ், சண்முகம் தரப்பு தனித்தனி சந்திப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக கலகம்: இபிஎஸ், சண்முகம் தரப்பு தனித்தனி சந்திப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக கலகம்: இபிஎஸ், சண்முகம் தரப்பு தனித்தனி சந்திப்பு!

அரசியல்

அதிமுக கலகம்: இபிஎஸ், சண்முகம் தரப்பு தனித்தனி சந்திப்பு!

Admin
Last updated: மே 15, 2026 8:13 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவரது ஆதரவாளரான தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு, சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவிக்கு எஸ்.பி.வேலுமணியையும், கொறடா பதவிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் தேர்வு செய்து, தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர். அதே சமயம், சி.வி.சண்முகம் தரப்பு, சட்டப்பேரவையில் தற்போதைய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதைத் தொடர்ந்து, வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை சி.வி.சண்முகம் தரப்பு கைப்பற்ற முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், 'அதிமுக தலைமை அலுவலகத்தை கோயிலாகவே கருதுகிறோம். எந்த சூழ்நிலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் என்பதை நிரூபித்த பிறகுதான் அங்கே எங்கள் கால்கள் பதியும்' என்றார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களான தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தனர். அப்போது, 'அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும். சட்டப்பேரவையில் தற்போதைய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். இதேபோல், சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் பேரவைத் தலைவரை சந்தித்து, 'எங்கள் தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை அங்கீகரிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், 'சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்கள்தான் சட்டப்பேரவைத் தலைவராகவும், கொறடாவாகவும் இருக்க வேண்டும். தற்போது எங்கள் தரப்பில் இருக்கும் 25 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்' என்றார். இதற்கிடையே, ஆளுநரை சந்திப்பதற்கான முயற்சியில் பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது. அப்போது, 'தற்போதைய ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக் கொண்டுவரும் வேலைகளில் சசிகலா தரப்பில் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKAIADMKஅதிமுகஉட்கட்சி பூசல்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஏப்ரலில் 42 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்: 8.3% உயர்வு!
Next Article ஐயர் கண்ணீர்! பஞ்சாப் கிங்ஸ் தொடர் தோல்வி: MI வெற்றி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

லண்டன் முதலீடு குறித்து அண்ணாமலை கேள்வி

பெரியாரின் சில கருத்துக்களை ஏற்கவில்லை என்றும், திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் 'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு – வேலூர் இப்ராஹிம் உறுதி

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.

1 Min Read
முதல்வர் விஜய் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை முந்தியுள்ளார்
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை முந்திய முதல்வர் விஜய்!

இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி ஃபாலோயர்ஸ்களுடன் ராகுல் காந்தியை முந்தி, முதல்வர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இது டிஜிட்டல் தளங்களில் அவரது வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

2 Min Read
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

4 மாதத்தில் ஆட்சி முடியும்: அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என்னை தவெக-வில் இணையச் சொன்னார் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், 4 மாதத்தில் இந்த…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?