MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 13, 2026 8:24 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகிறார்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர் விஜய்
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக, உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த தீர்மானம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் மறுவரையறை, அத்துடன் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பும் இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரப் பகிர்வைப் பாதுகாக்கவும், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான 2.2:1 என்ற விகிதத்தைப் பேணவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும், அதாவது மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும், மற்றும் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்துள்ளதாகவும், இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதோடு, பெண்களுக்கும் அரசியலில் சம வாய்ப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:33% இடஒதுக்கீடுCM VijayNarendra Modiஇந்தியப் பிரதமர்தமிழ்நாடு சட்டமன்றம்தொகுதி மறுவரையறைபிரதமர் மோடிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி பெற இயக்குநர் மொட்டை அடித்தார்!
Next Article சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகிறார் சொத்து வரி உயர்வு: அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை – மேயர் பிரியா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மல்லிகா
தமிழ்நாடு

பள்ளியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு எம்பி கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையையும்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு கடினம்: மாணவர் தற்கொலை – வீடியோ வெளியிட்டு உருக்கம்

நீட் மறுதேர்வு கடினமாக இருந்ததாக கூறி, வீடியோ வெளியிட்டு மாணவர் சுஷில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு

சாலை விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?