MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை

தமிழ்நாடு

ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 7:52 காலை
Fernandez
Share
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தந்து வழிபாடு செய்யும் காட்சி
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தந்து வழிபாடு
SHARE

பித்ரு தோஷத்தைப் போக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வணங்குவது சிறப்பம்சமாகும். இந்த புனித நாளில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம், திருமணம், குழந்தைப்பேறு போன்ற தாமதமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்றும், முன்னோர்களின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஜாபாலி மகரிஷி கூறியதன் படி, முன்னோர்களை சிறந்த முறையில், சிரத்தையுடன் வழிபட்டால் நீண்ட ஆயுள், நல்ல வாரிசுகள், புகழ், செல்வம், நிறைந்த தானியங்கள் உள்ளிட்ட பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம்.

'ஓடிப்போனவனுக்கு ஆடி அமாவாசை, தடுமாறிப்போனவனுக்குத் தை அமாவாசை, மறந்துபோனவனுக்கு மஹாளய அமாவாசை' என்றொரு பழமொழியும் உண்டு. அதன்படி, மறக்க முடியாத மற்றும் மறக்கப்பட்ட முன்னோர்களை வணங்கி, அவர்களை மகிழ்விக்க எள்ளும் நீரும் தந்து பூஜை செய்து, வறியவர்களுக்கு அன்னதானம் அளிப்பது அவசியம். இது எடுத்த ஜென்மம் கடைத்தேற உதவும்.

காஞ்சி பரமாசாரியாரின் விளக்கத்தின்படி, நாம் அளிக்கும் பொருள், பித்ரு தேவதைகளால் முன்னோர்களுக்குப் பிரியமான உணவாக மாற்றப்பட்டு, அவர்களுக்குச் சென்றடைகிறது. பித்ரு உலகில் உலவும் நம் மூதாதையர்கள், தர்மராஜனின் அனுமதியுடன் ஆடி அமாவாசையன்று பூமிக்குத் திரும்பி வருவதாகவும், புரட்டாசி மாத மஹாளய அமாவாசை வரை நம்முடன் மானசீகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தை அமாவாசை அன்று அவர்கள் நம்மை ஆசிர்வதித்துவிட்டு மீண்டும் பித்ரு உலகிற்குச் செல்வதாக ஐதிகம்.

எனவே, ஆடி, புரட்டாசி, தை அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் முறையாகத் திதி கொடுத்து முன்னோரை மகிழ்வித்தால், 21 தலைமுறைகளாகத் தொடரும் சகல தோஷங்களும் நீங்கி நன்மை பயக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பகவான் கிருஷ்ணர், 'தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்யாமல் தனக்கு மட்டும் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை' என்று கூறியுள்ளார். எனவே, பித்ரு தர்ப்பணம் மிகவும் முக்கியமானது. தாய், தந்தையரின் இறந்த தேதி அல்லது திதி தெரியாதவர்கள், ஆடி, புரட்டாசி, தை அமாவாசையன்று திதி கொடுக்கலாம். இதற்கு 'முன்னோருக்கு மூன்று கை தண்ணீர்' என்ற வட்டார வழக்கும் உண்டு.

நீதி நூல்களின்படி, புடலங்காய் பித்ருலோகத்தில் மூலிகையாக உள்ளது. அதன் நிழலில்தான் நம் முன்னோர் இளைப்பாறுகின்றனர். எனவே, ஆடி அமாவாசை அன்று புடலங்காய், வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை படையலில் சேர்ப்பதால், வாழையடி வாழையாகக் குலம் தழைக்க முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள். பசுந்தயிரும் அவர்களுக்குப் பிடித்தமான உணவு என்பதால், அதையும் சேர்ப்பது நல்லது.

பொதுவாக, இச்சையைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை அன்றைய தினம் தவிர்க்க வேண்டும். படையலை காகத்திற்கு வைத்து, காகம் உண்ட பிறகே நாம் உண்ண வேண்டும். நம் முன்னோர்தான் காகம் வடிவில் பூமிக்கு வருவதாக ஐதிகம். காகம் எமனின் தூதுவன் என்றும், எமலோகத்தின் வாயிலில் காவல் காக்கிறது என்றும் கூறப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்து, அது கொத்தி உண்டால், எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

மூதாதையர்கள் பிதுர்லோகம் திரும்புவதால், அவர்களின் பயணம் சீராக அமைய, அரிசி, பாசிப்பருப்பு, நெய், வாழைக்காய், குடை, காலணி போன்றவற்றை முன்னோரின் பிரதிநிதியாகப் பங்குபெறும் அந்தணர்களுக்கு அளிக்க வேண்டும். காசி, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், கயா, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பவானி கூடுதுறை, கொடுமுடி, பேரூர், திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு 'திலதைப்பதி' ஆகியவை ஆடி அமாவாசை அன்று முன்னோரை வழிபட சிறந்த தலங்களாகும். ஆடி அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது. பித்ரு பூஜை முடியும் வரை, வீட்டில் அன்றாடம் செய்யும் பூஜைகளைத் தவிர்க்க வேண்டும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Aadi AmavasaiPitru Doshaஆடி அமாவாசைகாஞ்சி பரமாசாரியர்கிருஷ்ணர்பித்ரு தோஷம்முன்னோர் வழிபாடுஜாபாலி மகரிஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகு முத்துக்களைப் போடும் கை வீட்டு மிளகு கலப்படமா? தண்ணீரில் எளிதாக கண்டுபிடிக்கலாம்!
Next Article தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பயணிகளுக்கு கட்டண விலக்கு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியிருக்கும் காட்சி

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல் இருப்பதாக கூறி, ஒரு மாதமாக…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

மும்பையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சென்னையில் தங்கத்தின் விலை குறைவு குறித்த செய்தி
தமிழ்நாடு

திடீர் தங்க விலை வீழ்ச்சி: வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

1 Min Read
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் லட்சுமிகாந்தன்
தமிழ்நாடு

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் பெற்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது

வேலை தருவதாக கூறி புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, ரூ.5 லட்சம் பறிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கேரள இளம்பெண் புகார். தொழிலதிபர் லட்சுமிகாந்தன் கைது.

2 Min Read
நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் புகார்
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் மகன் மீது அறப்போர் இயக்கத்தின் புகார்

சென்னை விருகம்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

கோவை: ஒரே பைக்கில் 4 மாணவர்கள் – வைரலாகும் ஆபத்தான சாகச வீடியோ!

கோவை காந்தி பார்க் சாலையில் பள்ளி சீருடையில் நான்கு மாணவர்கள் ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?