MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 9, 2026 11:00 காலை
Fernandez
Share
சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல்
சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல்
SHARE

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, நேர்மையான மற்றும் சமமான தொகுதி மறுவரையறையையும் வரவேற்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. போதிய ஆதரவு இல்லாததால், கடந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.

தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளும் பாஜக தரப்பிலிருந்து பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பஞ்சாபின் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பிற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் கூட்டம் சண்டிகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சீக்கிய குருக்களின் வழிகாட்டுதல்களின்படி பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை சிரோமணி அகாலி தளம் முழுமனதுடன் ஆதரிக்கிறது. இதேபோல் நேர்மையான, சமமான தொகுதி மறுவரையறையையும் ஆதரிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்றும் சுக்பீர் சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து, 1997 இல் பஞ்சாபில் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளிலும் இதே கூட்டணி ஆட்சி நீடித்தது. கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டணி உடைந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Delimitation BillPunjabShiromani Akali DalSukhbir Singh BadalWomen Reservationசிரோமணி அகாலி தளம்சுக்பீர் சிங் பாதல்தொகுதி மறுவரையறைபஞ்சாப்மகளிர் இடஒதுக்கீடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியார்மயம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Next Article புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது புதுச்சேரியில் காவலர்கள் மயக்கம்: அமித்ஷா நிகழ்ச்சியில் பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி மீது வாலிபர்…

ஆகஸ்ட் 9, 2026

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில்…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இந்தியா

ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல். பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறினால் ₹2,500 அபராதம். மேலும், ரயில் நிலையங்களில் வியாபாரம், பிச்சை எடுத்தால் அபராதம் உண்டு.

1 Min Read
உச்ச நீதிமன்ற கட்டிடம் அல்லது கோவை மாநகராட்சி கட்டிடம்
இந்தியா

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து இந்த…

2 Min Read
கர்நாடகாவில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் அறிவிப்பு
இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடக வேளாண் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெங்களூரு,…

2 Min Read
இந்தியா

பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாகவும், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலேயே ராகுல் காந்தி செயல்படுவதாகவும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?