MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவசாயிகள் துயரம்: ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக மாபெரும் போராட்டம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவசாயிகள் துயரம்: ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக மாபெரும் போராட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவசாயிகள் துயரம்: ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக மாபெரும் போராட்டம்!

தமிழ்நாடு

விவசாயிகள் துயரம்: ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக மாபெரும் போராட்டம்!

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 3:00 மணி
Fernandez
Share
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிடுதல்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்.
SHARE

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியின் கீழ் விவசாயிகள் படும் துன்பங்களுக்கு அவர்களே சாட்சி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் முதல்-அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழு கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளித்தனர். இதனையடுத்து, 75 ஆயிரம் ரூபாய் வரை முழு கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. ஆனால், சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதல்-அமைச்சர், இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தெரிவிக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை கர்நாடக முதல்-மந்திரி நேரில் சந்தித்து நிதியுதவி கோரியுள்ளார். மேலும், கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை கர்நாடக எம்.பி.க்கள் மேற்கோள் காட்டி பேசியுள்ளனர். கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் ஊடகங்களிடம் பேசி வருகிறார்.

இதற்கு மாறாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக மவுனம் காப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் கூறியதாகவும், பின்னர் அது மறுக்கப்பட்டதாகவும், தற்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், காவிரி நீரை நமக்கு உரிய பங்கு வழங்க முடியாது என கர்நாடக மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்கவில்லை. மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக பயணம் இதனை நீர்த்துப்போகச் செய்யாதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அரசின் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, எல்லாவற்றிலும் குழப்பமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதல்-அமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதற்கு எந்தப் பதிலும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி கோரிக்கை விடுத்தும், முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடப்பதாகவும், இதனால் 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. எனவே, ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய், காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழு காப்பீடு கிடைக்க உதவி, சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்கள் மானியமாக வழங்குதல் போன்ற நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.

விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களையும், ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் வென்றிட துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CauveryDMKFarmersMekedatuThanjavurகாவிரிதஞ்சைதிமுகமேகதாதுவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வாழைப்பழத் தோல் மற்றும் வினிகர் கலவையுடன் செடிகள் வாழைப்பழத் தோல் + வினிகர்: செடிகளுக்கு சூப்பர் உரம்!
Next Article வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சி 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை…

ஜூலை 30, 2026

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு…

ஜூலை 30, 2026

பாபர் மசூதி இடிப்பு தவறு: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு தவறு என்று கூறியது…

ஜூலை 30, 2026

மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர கணவன் கைது: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, துடித்த காட்சியை…

ஜூலை 30, 2026

3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹார், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் புதிய வசதி: இனி போன் நம்பர் தேவையில்லை!

வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் மொபைல் எண்ணைப் பகிராமலேயே 'பயனர் பெயர்' மூலம் மற்றவர்களுடன் உரையாடலாம். தனியுரிமையைப் பாதுகாக்கும் இந்த புதிய வசதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

2 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை விதித்து அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

பள்ளி வளாகங்களில் விழாக்கள் நடத்த தடை விதித்து அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கல்விக்கூடங்கள் அறிவுப் பண்ணைகள் என்றும், தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை என்றும்…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சேலம்: காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் வாலிபர் உடல் மீட்பு

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?