MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 6:49 மணி
Fernandez
Share
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
அமைச்சர் அருண்ராஜ்
SHARE

151 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு. கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களைக் கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பி வந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும்.

அன்று நீங்கள் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டதன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது.

அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.

தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் டாக்டர். அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் 28.07.2026 தேதியிட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்: நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிக முக்கிய சட்டப் பாதுகாப்பு: ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKMedical Seatsஅமைச்சர் அருண்ராஜ்உயர் சிறப்பு மருத்துவம்தமிழ்நாடு அரசுமருத்துவ இடங்கள்மு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விசாரணை நடைபெறும் இடம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விசாரணை தேதி மாற்றம்
Next Article கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டி அளிக்கும் காட்சி என் உயிரைக் காப்பாற்ற தோனி தான் பேட்டிங் செய்ய வேண்டும்: ஜடேஜா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மக்கள்

அசாம் வெள்ளம்: 75 பேர் உயிரிழப்பு, 3.32 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 25 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட…

ஜூலை 29, 2026

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில்…

ஜூலை 29, 2026

You Might Also Like

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அண்ணாமலை
தமிழ்நாடு

கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை அஞ்சலி: ‘வீ த லீடர்ஸ்’ மரியாதை

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் சார்பில் மரியாதை செலுத்தினார். கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அவரது கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்…

2 Min Read
திருவள்ளூரில் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை சம்பவம் நடந்த இடம்
தமிழ்நாடு

திருவள்ளூரில் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.15 ஆயிரம் கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப தேதிகள் வெளியீடு!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் பெறப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: முதல்-அமைச்சருக்கு எல்.முருகன் கேள்வி

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சருக்கு அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?