MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜோதிடருக்கு அரசுப் பதவியா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டனங்கள் குவிதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜோதிடருக்கு அரசுப் பதவியா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டனங்கள் குவிதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜோதிடருக்கு அரசுப் பதவியா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டனங்கள் குவிதல்

தமிழ்நாடு

ஜோதிடருக்கு அரசுப் பதவியா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டனங்கள் குவிதல்

Admin
Last updated: மே 12, 2026 11:18 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.

முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவது ஏற்புடையதல்ல என்றும், இந்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வன்னி அரசு, 'ஆஸ்தான ஜோதிடர்கள்' என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப் பதவியில், 'ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்', 'தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்' என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குக் கருத்துகளைப் பரப்புவதையே 'தொழிலாக' கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்குச் சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான, அறிவியலுக்குப் புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம், 'அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளர் ரிக்கி ராதன் பண்டிட் ஒரு ஜோதிடர். இந்த நியமனம் மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!
Next Article குதிரை பேரம் அரசியல் அல்ல, அது துர்நாற்றம் வீசும் செயல் – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

91 வயது முதியவர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது
தமிழ்நாடு

பட்டாசு தொழிலை காக்க மாரத்தான்: 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தல்

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில், 91 வயதான முதியவர் ஒருவர் 21 கிலோமீட்டர் தூரம் ஓடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருக்கு பரிசும்…

1 Min Read
தமிழ்நாடு

கடல்சார் ஏற்றுமதி மண்டலம்: மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

தமிழகத்திற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் திட்டத்தை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

0 Min Read
தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசு அறிவிப்பு
தமிழ்நாடு

சரக்கு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: மத்திய அரசு தகவல்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து, அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

உயர்கல்வி சீர்குலைவு: மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உயர்கல்வியின் தரத்தை பாதிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. அரசு உடனடியாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?