MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சீமான் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம்: நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சீமான் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம்: நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சீமான் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம்: நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி

தமிழ்நாடு

சீமான் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம்: நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 6:37 காலை
Fernandez
Share
நீதிபதி விக்டோரியா கௌரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் அமர்ந்திருக்கும் காட்சி
மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் நீதிபதி விக்டோரியா கௌரி
SHARE

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 28) நீதிபதி விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்ட யூடியூபர்கள், சீமான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகளை வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரச்சாரம் என்றும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, காவல்துறை நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி கடும் அதிருப்தி தெரிவித்தார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, சீமான் விவகாரத்தில் ஏன் அதேபோன்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

'சீமான் தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக அவர் உருவாகி உள்ளார்' என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இடம் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் ரூ. 100 கோடி பெற்றதாக பேசிய யூடியூபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனால், சீமான் மீது அவதூறாக பேசினால் மட்டும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

'இதற்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்தீர்கள். காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாகவோ அல்லது அசிங்கமாகவோ பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை யூடியூபர்கள், சீமானை மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர். இதனை ஏற்க முடியாது' என்று நீதிபதி கடுமையாக சாடினார்.

எனவே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, நாளை (அதாவது இன்று) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:defamation caseJustice Victoria GowriMadurai High CourtPolice BiasSeemanYouTuberஅவதூறு வழக்குகாவல்துறை பாரபட்சம்சீமான்நீதிபதி விக்டோரியா கௌரிமதுரை உயர் நீதிமன்றம்யூடியூபர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவியர் பள்ளி இடைநிற்றல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல் 9-10 ஆம் வகுப்பு மாணவியர் இடைநிற்றல்: மத்திய அரசு தகவல்
Next Article அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அரசு பேருந்துகளில் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு – போக்குவரத்து துறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை

நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு…

ஜூலை 29, 2026

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பேருந்து விபத்து: 39 பக்தர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு உத்தரவு

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500…

ஜூலை 29, 2026

அசாம் வெள்ளம்: 4.45 லட்சம் பேர் பாதிப்பு – பிரதமர் மோடி ஆய்வு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால்…

ஜூலை 29, 2026

ஜார்க்கண்டில் 16 மாவோயிஸ்ட்கள் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஜார்க்கண்டில் 5 பெண்கள் உட்பட 16 மாவோயிஸ்ட்கள்,…

ஜூலை 29, 2026

You Might Also Like

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

கோவையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: வானதி சீனிவாசன் கண்டனம்

கோவையில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவக் கல்லூரிகள் 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 Min Read
தமிழ்நாடு

பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகரில் போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பதாகையில் தனது பெயர் கீர்த்தனாவிற்கு கீழ் இருந்ததால் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆட்சியரை கண்டித்தார். இது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகள், தவறான தகவல் தந்தால் ரூ.1000 அபராதம்!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்படும். தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?