MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 6:39 காலை
Fernandez
Share
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கட்டிடம்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
SHARE

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், பண மோசடி வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார். நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு இந்த முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் லஞ்சம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, இருவரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கடந்த ஜூலை 8ஆம் தேதி இந்த மனுக்களை விசாரித்து, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் பெற வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, ஜூலை 24ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமின் பெற்றார். அதன் பின்னர் காவல்துறையினரிடம் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் ஆஜரானார். பிணைத்தொகை மற்றும் உத்தரவாதத்தை செலுத்திய பிறகு, அவருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறையினர் முன் தினமும் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு முன் ஜாமின் கிடைத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anticipatory BailAshokkumarChennai CourtSenthil Balajiஅசோக்குமார்செந்தில் பாலாஜிசென்னை நீதிமன்றம்பண மோசடிமுன் ஜாமீன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை ரம்யா ரங்கநாதன் ரசிகர்களின் கைத்தட்டல்களே மிகப்பெரிய விருது என பேட்டி அளிக்கும் காட்சி ரசிகர்களின் கைத்தட்டலே மிகப்பெரிய விருது: ரம்யா ரங்கநாதன்
Next Article இன்றைய ராசிபலன் 28-07-2026 இன்றைய ராசிபலன்: 28-07-2026 – பணி இடமாற்றம் நிச்சயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்

மேகேதாட்டு அணை: டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை

கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், மேகேதாட்டு மற்றும் மகதாயி அணைத் திட்டங்களுக்கு…

ஜூலை 28, 2026

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வைர வியாபாரி ரூ.44 கோடி பிணையில் மீட்பு

மாலியில் கடத்தப்பட்ட 75 வயது இந்திய வம்சாவளி…

ஜூலை 28, 2026

இன்ஸ்டாகிராமில் ராகுலை முந்திய முதல்வர் விஜய்!

இன்ஸ்டாகிராமில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை…

ஜூலை 28, 2026

யூரியா இறக்குமதியில் தட்டுப்பாடு: மாற்று வழிக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் யூரியா உரம் இறக்குமதியில் நிலவும் தட்டுப்பாட்டைச்…

ஜூலை 28, 2026

தேர்வு சீர்திருத்தக் குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணர் நியமனம் – பின்னணி என்ன?

போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தங்களுக்காக…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் ‘Thug Life Moment’ ஸ்டேட்டஸ்: சர்ச்சையில் சிக்கிய வீடியோ

அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் எடுத்த 'Thug Life Moment' ஸ்டேட்டஸ் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் என பகிரப்படும் வீடியோ குறித்து விளக்கமளிக்கப்பட்டாலும், கேள்விகள்…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா?? வி.எஸ் பாபு அதிருப்தி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ் பாபு. முன்னாள் முதல்வரை தோற்கடித்த வி.எஸ் பாபுவிற்கு…

1 Min Read
தமிழ்நாடு

சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை: நற்பணி இயக்கம் விளக்கம்

நடிகர் சூர்யா அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான வதந்திகளுக்கு அவரது நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை என்றும், சமூக சேவைகளில் மகிழ்ச்சி…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு? த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி ஆதரவு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவில் இருந்த பிளவு வெளிப்படையாகத் தெரிந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை முடித்தவுடன், அவரது தரப்புக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?