MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சஞ்சு சாம்சனுக்கு அநீதி: ஹனுமா விஹாரி கடும் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சஞ்சு சாம்சனுக்கு அநீதி: ஹனுமா விஹாரி கடும் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சஞ்சு சாம்சனுக்கு அநீதி: ஹனுமா விஹாரி கடும் விமர்சனம்

விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு அநீதி: ஹனுமா விஹாரி கடும் விமர்சனம்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 27, 2026 9:23 காலை
Sri Prem Kumar R
Share
இந்திய டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி
இந்திய டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி
SHARE

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இரு வீரர்களைத் தேர்வு செய்வதில் அணி நிர்வாகம் வெவ்வேறு அளவுகோல்களைப் பின்பற்றுவதாக இந்திய டெஸ்ட் அணி வீரர் ஹனுமா விஹாரி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு முன் 5 போட்டிகளில் சரியாக ஆடாததால் சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழந்தார். பின்னர் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து, 2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்ததுடன் தொடர்நாயகன் விருதையும் வென்றார். உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்றிலுமே அரைசதம் அடித்தார். ஆனால், தற்போது இங்கிலாந்து தொடரில் சொதப்பியதாகக் கூறி ஜிம்பாப்வே தொடரில் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளதாக தேர்வுக்குழுவினர் மழுப்புகின்றனர் என்று ஹனுமா விஹாரி கூறினார்.

அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்து சுட்டிக்காட்டிய ஹனுமா விஹாரி, தொடர்ந்து சொதப்பி வரும் அபிஷேக் ஷர்மாவுக்கு மட்டும் ஏன் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கடந்த 18 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் வெறும் 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் அவரது ரன்கள் 49, 0, 59, 43, 10, 16, 3, 1, 8 என மிகவும் மோசமாக உள்ளது.

இங்கிலாந்து தொடரிலும் ஒரேயொரு அரைசதம் தவிர அவர் 20, 30 ரன்களைக் கூடக் கடக்கவில்லை. உலகக்கோப்பையிலும் அவரது அதிகபட்ச ரன் 16 மட்டுமே. அவரைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை? என்றும் ஹனுமா விஹாரி தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், சஞ்சு சாம்சனை மட்டும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை எனக் கூறி நீக்குகிறார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மாவுக்கும் இதே நிலை தான். அபிஷேக் ஷர்மாவை விட சாம்சன் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பிரப்சிம்ரன் சிங்குக்கு 10 போட்டிகள் கொடுத்தால் அவரும் 2 அரைசதங்கள் அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு அபிஷேக் ஷர்மா மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆனால், இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சமமாக நடத்தப்பட்டு, ஃபார்மின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என ஹனுமா விஹாரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வீரர்களின் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்தும், அபிஷேக் ஷர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்தும் ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களின் தேர்வு நியாயமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Abhishek SharmaCricketHanuma VihariSanju SamsonT20Team Indiaஅபிஷேக் சர்மாஇந்திய அணிகிரிக்கெட்சஞ்சு சாம்சன்டி20ஹனுமா விஹாரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் காட்சி கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில்: உடலில் மிளகாய் கரைசல் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்
Next Article மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை: பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார்

கொல்கத்தா மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவி பத்திரிகையாளர்களை தாக்கியதாக மத்திய கல்வி இணை…

ஜூலை 27, 2026

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சர் மாற்றம்!

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி…

ஜூலை 27, 2026

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத்…

ஜூலை 27, 2026

மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் போராட்டத்தின் போது…

ஜூலை 27, 2026

மக்களின் நலனுக்காக செயல்படுங்கள் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரத்தை வெளிப்படுத்துவதை…

ஜூலை 27, 2026

You Might Also Like

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி
விளையாட்டு

சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர்: தோனி எடுக்கிறார் முக்கிய முடிவு!

சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளரை எம்.எஸ். தோனி தேர்வு செய்யவுள்ளார். ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்ட நிலையில், இந்திய பயிற்சியாளரை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2 Min Read
விளையாட்டு

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோத்ரானி தோல்வியால் இந்தியா வெளியேற்றம்

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் வீர் சோத்ரானி தோல்வியடைந்ததால், இத்தொடரில் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது.

0 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி: அஸ்வின் கருத்து

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது குறித்து பேசிய அஸ்வின், அவர் தண்ணீர் கொண்டு வரும் பணி செய்வதில் தவறில்லை…

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை புகழாதீர்கள்: கபில் தேவ் எச்சரிக்கை

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிகப்படியான புகழை அளித்து, தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?