தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் (CMO Tamil Nadu) அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.
முதலமைச்சர் அலுவலகத்தின் சமூக வலைதளப் பக்கங்களில், முதலமைச்சரின் அரசு சார்ந்த செயல்பாடுகள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள், அரசின் நலத்திட்ட அறிவிப்புகள், அரசாணைகளில் கையெழுத்திடும் நிகழ்வுகள் போன்ற தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளாக பகிரப்பட்டு மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
இதற்கு முன்னர், முதலமைச்சர் அலுவலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் 4 லட்சம் பின்தொடர்வோர்களுடன் இயங்கி வந்தது. தமிழக முதலமைச்சராக மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று (மே 11) ஒரே நாளில் மட்டும் 11 லட்சம் பின்தொடர்வோர்களைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் 22 லட்சம் பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ளது. அரசு நிர்வகிக்கும் ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது புதிய அரசின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை தெளிவாகக் காட்டுகிறது. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமல்லாமல், எக்ஸ் மற்றும் முகநூல் பக்கங்களை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.