MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியா

ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

Admin
Last updated: மே 12, 2026 6:49 காலை
Admin
Share
SHARE

ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது. முதலில் கொரோனா பெருந்தொற்று, அதன் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சவால், இப்போது மேற்காசிய போர் பதற்றத்தால் உலக நாடுகள் சவாலை எதிர்கொண்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக மேற்காசிய போர் நிலவி வருகிறது. நாம் எல்லோரும் இணைந்து எப்படி கொரோனா சவாலை கடந்து வந்தோமோ, அது போல இந்த சவாலையும் நிச்சயம் நாம் கடந்து வருவோம். இதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்படாத வகையிலான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பல லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது. அதே சமயத்தில் இறக்குமதி பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதோடு உலக அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களின் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த பொருட்களை நாம் சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அந்நிய செலவாணியில் தொடர்புடைய தனி செயல்பாட்டை தவிர்க்க வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மெட்ரோ, பொது போக்குவரத்து, மின்சார வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்கள் எளிதானதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் அலுவலகம் சார்ந்த கூட்டத்தை ஆன்லைனில் விர்ச்சுவல் முறையில் நடத்தலாம்.

வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பின்பற்றலாம். தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது. அந்த வகையில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம்” என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article RJ Balaji | அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை – இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
Next Article PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

ஒடிசாவில் வெள்ளம்: 3.5 லட்சம் பேர் பாதிப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

ஒடிசாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் 3.5 லட்சம்…

ஆகஸ்ட் 20, 2026

குஜராத்தில் போலி மது: 4 பேர் உயிரிழப்பு, 19 பேர் சிகிச்சை

குஜராத்தில் போலி மது அருந்தியதால் 4 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

இந்தியா

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வடமாநிலங்களில் உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

1 Min Read
இமாச்சலப் பிரதேசம் பேருந்து விபத்து நடந்த இடம்
இந்தியா

இமாச்சலப் பிரதேசம்: பேருந்து கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 18 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

1 Min Read
மக்களவையில் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேற்றம்
இந்தியா

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

1 Min Read
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்
இந்தியா

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?