இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடலான Bajaj Pulsar N125, அதன் சிறப்பான மைலேஜ் மற்றும் கட்டுப்படியான விலை காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக், அதன் செயல்திறன் மற்றும் நவீன அம்சங்களுடன் சந்தையில் தனித்து நிற்கிறது.
Bajaj Pulsar N125 இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதன் முதல் வேரியண்டான Pulsar N125 Disc – Bluetooth மாடல் ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 999 விலையிலும், Pulsar N125 LED Disc மாடல் ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 165 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
இந்த பைக், கருப்பு, சாம்பல் – பச்சை, கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் 124.58 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த எடை 125 கிலோ ஆகும். இருக்கை உயரம் 795 மி.மீட்டர் என வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் என்று பார்த்தால், இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முழு பெட்ரோல் டேங்க் நிரப்பினால், சுமார் 570 கி.மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது 11 என்எம் டார்க் இழுவிசையைக் கொண்டுள்ளதுடன், அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த Bajaj Pulsar N125 பைக்கில் 5 கியர்கள் உள்ளன. இதில் ஒரு கியர் கீழ்நோக்கியும், நான்கு கியர்கள் மேல்நோக்கியும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் தரநிலைகளுக்கு இணங்குகிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் ட்ரம் பிரேக் ஆகியவை பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்கள் 17 இன்ச் அளவு கொண்டவை. ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனும் அதிர்வுகளைக் குறைத்து மென்மையான பயணத்தை உறுதி செய்கின்றன. ரிசர்வ் டேங்க் 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. மேலும், இந்த பைக் 75 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்களுக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, எல்சிடி டிஸ்ப்ளே, பிரைட்னஸ் கண்ட்ரோல், ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், டிஸ்டன்ஸ் டூ எம்டி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், 2 ட்ரிப்மீட்டர்கள், ஸ்டாண்ட் அலாரம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட், நேரம் பார்க்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் வசதி, சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப், கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட், சைலன்ஸ் கவர், கில் ஸ்விட்ச், ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப், சைலண்ட் ஸ்டார்ட் போன்ற பல நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலேயே எரியும் விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள், ஹசார்ட் வார்னிங் விளக்குகள், பில்லியன் சீட் விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடி தொழில்நுட்பத்தில் வந்துள்ளன. இது பைக்கிற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
