MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவின் முதல் ‘மெனினிஸ்ட்’ நூல்: எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா வேண்டுகோள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவின் முதல் ‘மெனினிஸ்ட்’ நூல்: எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - இந்தியாவின் முதல் ‘மெனினிஸ்ட்’ நூல்: எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா வேண்டுகோள்

கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியாவின் முதல் ‘மெனினிஸ்ட்’ நூல்: எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா வேண்டுகோள்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 20, 2026 6:29 காலை
Sri Prem Kumar R
Share
எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா கோவை புத்தக திருவிழாவில் பேசுகிறார்
கோவை புத்தக திருவிழாவில் எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா
SHARE

கோவை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ள பிரபல எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா, பெண்களை மதிப்பதையும் ஆண்களின் உரிமைகளையும் பேசும் இந்தியாவின் முதல் 'மெனினிஸ்ட்' நூலை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தலைமுறையினர் செல்போன் மாயையிலிருந்து விடுபட்டு வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், பிரபல எழுத்தாளரும் தொழிலதிபருமான அக்ஷய் ஷர்மா தனது 5-வது படைப்பான 'மெனினிஸ்ட்' (Meninist) என்ற புதிய நூலை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நூல் 'பெண்களை மதித்தல்' மற்றும் 'ஆண்களின் உரிமைகள்' ஆகிய சமூகப் பார்வைகளை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகவும், இது வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்போன், கணினி போன்ற மாயைகளிலிருந்து வெளிவந்து, தங்களது அறிவையும் ஆளுமையையும் செதுக்கிக் கொள்ளப் புத்தகங்களை வாசிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாசிப்பின் மூலம் மட்டுமே ஒருவர் தனது அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள முடியும் என அவர் இன்றைய தலைமுறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில், கோயம்புத்தூர் புக் பெஸ்டிவல் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் இந்த மாபெரும் புத்தக திருவிழா, ஜூலை 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தக திருவிழாவில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பிறந்து கோவையில் 33 வருடங்களாக வசித்து வரும் அக்ஷய் ஷர்மா, இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை தளமான மார்க் ப்ளை பப்ளிஷர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக புத்தகங்கள் எழுதி வருகிறார்.

இவர் தனது மூன்று புத்தகங்களை எழுதி, ஆயிரக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு 'த ப்ளையிங் ட்ரீம்ஸ்' எனும் புத்தகத்தை எழுதி, அதனை நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளார். இந்தப் புத்தகம் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளது. இவரது இரண்டாவது புத்தகமாக, 'ரைட்டர் ஆன் அ மிஷின்' எனும் புத்தகத்தை 2024ல் எழுதி, இதனையும் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது புத்தகமான 'பாரத் ஆப் ஐகான்ஸ்' எனும் புத்தகத்தின் கருவை தொழிலதிபர் தீபக் ஜெயின் வழங்க, அதனை அக்ஷய் ஷர்மா எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், 4வது புத்தகமாக 'ப்ரம் அஷஸ் டூ கிங்' மற்றும் 5வது புத்தகமாக 'மெனினிஸ்டு' எனும் புத்தகங்களையும் தற்போது எழுதி வருகிறார். இந்த இரு புத்தகங்களும் அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவை புத்தக திருவிழாவில் அரங்கு அமைத்துள்ள இவர், தனது புத்தகங்களை காட்சிப்படுத்தியதுடன், தனது புத்தகங்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா கூறியதாவது: 'நாடு முழுவதும் தனது புத்தகங்கள் பல்வேறு அலைகளை புத்தக ப்ரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி' என்று தெரிவித்தார்.

'இன்றைய காலத்தில் புத்தகம் வாசிப்பது என்பது அரிதாக நடக்கின்ற நிகழ்வாக வருகின்றது. செல்போன், கனிணி, இன்டர்நெட் எனும் டிஜிட்டல் மாயையிலிருந்து பள்ளி மாணவிகள் முதல் இளைஞர்கள் வரை வெளிவர வேண்டும், அவர்கள் தங்கள் அறிவை செதுக்கிக் கொள்ள, புத்தகங்களை வாசிக்க முன்வர வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 'பெண்களை மதிப்பும் மற்றும் ஆண்களின் உரிமைகள்' கருப்பொருளால் சமூகப் பார்வைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'மெனினிஸ்ட்' என்கின்ற இந்த நூல் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் எழுத்தாளர் அக்ஷய் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Akshay SharmaBook ReadingCoimbatore Book FestivalMeninistஅக்ஷய் ஷர்மாகோவை புத்தக திருவிழாபுத்தகம் வாசிப்புமெனினிஸ்ட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழங்கள் நிறைந்த தட்டில் அத்திப்பழங்கள் அத்திப்பழம்: தினமும் 2 சாப்பிட்டால் நோய்கள் ஓடும்!
Next Article வருமான வரி தாக்கல் 2026: எஃப்.டி வட்டிக்கு வரி விதிப்பு குறித்த வழிகாட்டி வருமான வரி தாக்கல் 2026: எஃப்.டி வட்டிக்கு வரி விதிப்பு – முழு விவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்

பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி கைது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி…

ஜூலை 21, 2026

டெல்லி செல்ல அனுமதி மறுப்பு: ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பஞ்சாப் விவசாயிகள்…

ஜூலை 21, 2026

டெல்லியில் காங்கிரஸ் திடீர் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை

டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே காங்கிரஸ்…

ஜூலை 21, 2026

டெல்லியில் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில்…

ஜூலை 21, 2026

பிரதமர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி…

ஜூலை 21, 2026

You Might Also Like

உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு கல்லூரி பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு குறித்து விளக்கம் அளிக்கிறார்
கல்வி & வேலைவாய்ப்பு

கல்லூரி பணியாளர் இடமாறுதல்: அமைச்சர் விளக்கம்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பணியாளர்கள் www.nonteaching.dcetransfer.in இணையதளத்தில்…

1 Min Read
TNEA 2026 பொறியியல் சேர்க்கைக்கான விருப்பப் பதிவுப் பட்டியல் குறித்த அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

TNEA 2026: சென்னை மண்டல சிறந்த கல்லூரிகள் – ரவுண்ட் 1 பட்டியல் வெளியீடு!

TNEA 2026: சென்னை மண்டலத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான முதல் சுற்று விருப்பப் பதிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக…

1 Min Read
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

TNEA 2026: CCE துறை டிரெண்டாகிறது – சிறந்த கல்லூரிகள்

தமிழகத்தில் TNEA 2026 பொறியியல் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் (CCE) துறை மாணவர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. வேலைவாய்ப்பு…

2 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு: 45 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசுப் பணிகளில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. மத்திய குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் (UPSC), பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?