MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32

சினிமா

தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32

Admin
Last updated: மே 11, 2026 1:22 மணி
Admin
Share
SHARE

இப்​போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்​வ​ராகி இருக்​கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்​கிற காலங்​களி​லேயே எனக்கு தெரி​யும். அவருடைய தாய்​மாமா எஸ்​.என்​.சுரேந்​தர் என் நண்​பர். சுரேந்​தரின் சகோ​தரர் காலஞ்​சென்ற சுந்​தரும் நானும் அண்​ணன் தம்பி போல பழகி வந்​தோம்.

இன்​றும் எஸ்​.என்​.சுரேந்​தருடன் அதே நெருக்​கத்​தில்​தான் இருக்​கிறேன். விஜய்​யின் அம்​மா​வான ஷோபாவை, அக்கா என்று அழைக்​கிற அளவுக்​கும் தந்தை எஸ்​.ஏ.சந்​திரசேகரை மாமா என்​றழைக்கற அளவுக்​கும் நான் அவர்​களுக்கு நெருக்​க​மானவன்.

விஜய்​யின் சித்தி ஷீலா​வை, அக்கா என்​றழைக்​கும் அளவுக்​கும் அவர் கணவர் சிவாவை மாமா என்று அழைக்​கும் அளவுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வ​னாகப் பழகிய​வன். இப்​போதும் அப்​படித்​தான் பழகு​கிறேன்.

அடிக்​கடி அவர்​கள் வீட்​டுக்​குப் போவேன். சுரேந்​தரும் என் வீட்​டுக்கு வரு​வார். ஷோபா அக்​கா​வின் அப்பா நீல​கண்​டனை நானும் அப்பா என்​று​தான் அழைப்​பேன். எஸ்​.ஏ.சந்​திரசேகர் மாமா​வின் பல படங்​களில் நான் டப்​பிங் பேசி​யிருக்​கிறேன். அவரை எப்​போதும் சந்​திக்க எனக்கு உரிமை உண்​டு.

விஜய் நடிப்​பில் மஜித் இயக்​கிய ‘தமிழன்’ படத்​தில் நான் கண்​டக்​ட​ராக நடித்​தேன். அப்​போதே விஜய் பெரிய நடிக​ராகி​விட்​டார். அதன் படப்​பிடிப்​பில் அவரிடம் சென்று என்னை ஞாபகம் இருக்​கா?” என்று கேட்​டேன். “பார்த்​திருக்​கேன், என்​றார். பிறகு நான் ஞாபகப்​படுத்​திச் சொன்​னதும் ஆமா என்று கேட்​டுக்​கொண்​டார்.

பிறகு இடை​யில் சில காலம் இடைவெளி விழுந்​து​விட்​டது. அப்​போது ஒரு நாள் எஸ்​.ஏ.சந்​திரசேகர் மாமாவை பார்க்​கச் சென்​ற​போது, “என்ன ஆளே காணோம். கண்​டக்​டர் ஆயிட்​டி​யா?” என்று கிண்​டலாக கேட்​டார். “இல்​லை​யே, ஏன்?” என்று கேட்​டேன்.

“தமிழன் படத்​துல கண்​டக்​டர் மாதிரி அப்​படியே இயல்பா பண்​ணி​யிருந்​தி​யே, அதனால கேட்​டேன்” என்​றார். நான் சிரித்​துக்​கொண்​டேன். பிறகு அதிக படங்​களில் நான் நடிக்​க​வில்​லை. அடுத்​து, திருப்​பாச்​சி, சிவ​காசி, வேலா​யுதம், காவலன் என பல படங்​களில் விஜய்​யுடன் நடித்​திருக்​கிறேன். அப்​போதெல்​லாம் ரொம்ப ஜாலி​யாக எல்​லோரும் உட்​கார்ந்து பேசிக்​கொண்​டிருப்​போம். எல்​லோரிட​மும் அன்​பாக, “சாப்​பிட்​டீங்​களா?” என்று விசா​ரிப்​பார்.

ஒரு முறை டப்​பிங் தியேட்​டரில், அவர் உள்ளே பேசிக்​கொண்​டிருக்​கார் என்​றனர். நான் வேறொரு படத்​துக்கு டப்​பிங் பேசிக்​கொண்​டிருந்​தேன். அவர் வெளியே வந்​து,

என்​னைப் பார்த்​ததும் இரண்டு கையை​யும் விரித்து “எப்​படி​யிருக்​கீங்​க?” என்று கட்​டிப் பிடித்​துக்​கொண்​டார்.

இப்​போது சில ஆண்​டு​களாக அவரை நேரில் பார்க்​க​வில்​லை. தூரத்​தில் இருந்து பார்த்து ரசித்​துக்​கொண்​டு​தான் இருக்​கிறேன். பெரிய நட்​சத்​திர​மாக அவர் உயர்ந்​திருப்​ப​தில் மட்​டற்ற மகிழ்ச்​சி.

அழகாக பாடக்​கூடிய, அற்​புத​மாக நடன​மாடக் கூடிய, அதிரடி​யான சண்​டைக்​காட்​சிகளில் வீரம் காட்​டக் கூடிய பிர​மாத​மாக நடிக்​கக்​கூடிய திறமை​யான பிள்ளை அவர். சங்​கீத ஞானம் அவருக்கு வந்​த​தில் ஆச்​சரியப்பட வேண்​டிய​தில்​லை. அவருடைய மாமா சுரேந்தர், அம்மா ஷோபாக்கா ஆகியோர் நன்​றாக பாடு​பவர்​கள் என்​ப​தால் அதில் ஆச்சரியமில்​லை.

இப்​போது முதல்​வ​ராகி மக்​கள் சேவை செய்ய இருக்​கிறார். உலகெங்​கும் இருக்​கக்​ கூடிய அவருடைய ரசிகர்​களின் அன்​பும் அரவணைப்​பும் இந்​தளவுக்கு உயர்த்தி இருக்​கிறது என்​பது ஒரு பக்​கம் இருந்​தா​லும் அவருடைய கடுமை​யான உழைப்​பும், அவர் ஏற்​றுக்​கொள்​கிற கேரக்​டர்​களில் காட்​டு​கிற ஈடு​பாடும், உடன் நடிப்​பவர்​களை மட்​டுமல்​லாமல், எல்​லோரை​யும் மதிக்​கிற பண்​பும் சேர்ந்​து​தான் அவரை இந்​தளவுக்கு உயர்த்தி இருக்​கிறது என நான் நினைக்​கிறேன்.

என் குடும்​பத்​தில் என் மனை​வி, மகன், மகள் எல்​லோருமே அவருடைய ரசிகர்​கள்​தான். அவர் கட்சி தொடங்​கி, 2 ஆண்​டு​களுக்​குள் ஆட்​சியை பிடிக்​கிற அளவுக்கு மக்​களிடம் அன்பை சம்​பா​தித்​திருக்​கிறார் என்​பதை நினைக்​கும்​போது எனக்​குள் மகிழ்ச்சி நில​வு​கிறது.

ஆண்​ட​வன் அவருக்கு நீண்ட ஆயுளை​யும் நல்ல ஆரோக்​கி​யத்​தை​யும் அற்​புத​மான ஆட்​சியை தரக்​கூடிய திறமை​யை​யும் தர வேண்​டும் என்று இறைவனை வேண்​டிக் கொள்​கிறேன். வாழ்த்​துகள், தமிழக முதல்​வர் விஜய் அவர்​களே!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்
Next Article ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி

கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடி…

ஜூலை 15, 2026

18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?

லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக்…

ஜூலை 15, 2026

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

You Might Also Like

சினிமா

ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், ரவி மோகன் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் என விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
நடிகர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு
சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ல் வெளியீடு?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 Min Read
சினிமா

ஜோதிகா, சோனாக்‌ஷி நடித்துள்ள ‘சிஸ்டம்’

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘சிஸ்டம்’. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இவர் தமிழில் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர்.…

1 Min Read
லோகேஷ் கனகராஜ் நடித்த 'டிசி' திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியீடு
சினிமா

லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ பட வீடியோ பாடல் வெளியீடு

கேங்ஸ்டராக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் வீடியோ பாடல் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற 31ஆம் தேதி வெளியாகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?