MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஸ்போர்ட் பயண ஆவணம் மட்டுமே: மத்திய அரசு மீண்டும் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஸ்போர்ட் பயண ஆவணம் மட்டுமே: மத்திய அரசு மீண்டும் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பாஸ்போர்ட் பயண ஆவணம் மட்டுமே: மத்திய அரசு மீண்டும் விளக்கம்

இந்தியா

பாஸ்போர்ட் பயண ஆவணம் மட்டுமே: மத்திய அரசு மீண்டும் விளக்கம்

Fernandez
Last updated: ஜூலை 16, 2026 11:03 காலை
Fernandez
Share
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
பாஸ்போர்ட் பயண ஆவணம் மட்டுமே என மத்திய அரசு விளக்கம்
SHARE

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஸ்போர்ட்டை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 'வகுகக்கப்பட்ட நடைமுறைகளின்படி, முறையான சரிபார்ப்புகளுக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ பாஸ்போர்ட் வழங்குவது என்பது, பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் பாஸ்போர்ட் விதிகள் 1980 ஆகியவற்றின் படியே கட்டுப்படுத்தப்படுகிறது' என்று தெரிவித்தார்.

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் படி, இந்தியக் குடிமக்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதை முறைப்படுத்துவதற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இந்திய பாஸ்போர்ட் விளங்குகிறது. மேலும், தற்போது இந்தியர்களில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த மாதம் ஜூன் 24 அன்று நடைபெற்ற 'பாஸ்போர்ட் சேவா திவஸ்' செய்தியாளர் சந்திப்பின் போதும், இந்திய பாஸ்போர்ட் என்பது முழுக்க முழுக்க ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை குடியுரிமைக்கான சான்றாகக் கருதக்கூடாது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பாஸ்போர்ட் என்பது இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்படுகிறது என்றாலும், அதன் முதன்மை நோக்கம் சர்வதேச பயணங்களை மேற்கொள்வதும், வெளிநாடுகளில் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதுமே ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒருவரின் பயண ஆவணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வழங்கப்படுகிறது.

பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் இந்திய குடிமகன் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பது மட்டுமே அவர் இந்நாட்டின் குடிமகன் என்பதற்கான 'முடிவான' அல்லது 'முழுமையான' ஆதாரம் ஆகிவிடாது என்று கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. எனவே, பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணமாக மட்டுமே கருதப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Central GovernmentCitizenshipPassportTravel Documentஇந்திய பாஸ்போர்ட்குடியுரிமைபயண ஆவணம்பாஸ்போர்ட்மத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காமராஜர் பிறந்த நாள்: அண்ணாமலை வேண்டுகோள்
Next Article சென்னையில் ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் குறித்த அறிவிப்பு பலகை சென்னையில் நாளை 8 மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கவனத்திற்கு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

சோனம் வாங்சுக் உடல்நிலை: கண்காணிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காலவரையின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை…

ஜூலை 16, 2026

கர்நாடகாவில் ரூ.34 கோடி போதைப்பொருள் பறிமுதல்

கர்நாடகாவில் தின்பண்டங்களில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.34 கோடி…

ஜூலை 16, 2026

எனக்கு மாரடைப்பு வர பாஜக விரும்புகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல்…

ஜூலை 16, 2026

கேரளாவில் சூரியசக்தி ரயில் திட்டத்திற்கு நிபுணர் குழு எதிர்ப்பு

கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000…

ஜூலை 16, 2026

கங்கை – காவிரி இணைப்பு: தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு – சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் கிருஷ்ணா - கோதாவரி சங்கமத்தில் புனித…

ஜூலை 16, 2026

You Might Also Like

இந்தியா

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray, INS Sanshodhak ஆகிய 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை 75% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.

1 Min Read
இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

3 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜயின் முதல் கோரிக்கை வெற்றி: ரூ.7,500 கோடி நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல்

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் CMIUTM திட்டத்திற்கு மத்திய அரசின் ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல். குடிநீர், கழிவுநீர், சாலைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் சீரமைப்புக்கு இந்த…

1 Min Read
இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?