MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்ஜாமீன் நிபந்தனைகள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்ஜாமீன் நிபந்தனைகள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்ஜாமீன் நிபந்தனைகள்

தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்ஜாமீன் நிபந்தனைகள்

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 2:24 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
SHARE

சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியின் தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை, சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது குறிப்பிட்டபடி செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் திங்கட்கிழமை (ஜூலை 5) அன்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகாமல் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம், காலை மற்றும் மாலை இரு வேளையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. இருப்பினும், இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், வழக்கு பதிவில் தனது பெயரும், தனது சகோதரர் அசோக் குமார் பெயரும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தவெக பேரம் பேசிய வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதாவது, காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி காவல்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்பொழுது தவெக பேரம் பேசிய வழக்கு பதிவில் பெயர் இல்லாத நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு எப்படி ஆஜராக முடியும் என்றும் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நான் மக்கள் பிரதிநிதி என்பதாலும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தொழிலதிபர் என்பதாலும், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் என்னை கைது செய்யக்கூடாது என்றும், 35 (3) BNS என்ற பிரிவின் கீழ் எனக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மருத்துவ வசதி இருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anticipatory BailBribeDr. N. IlayarajaSenthil BalajiThiruvallikeni PoliceTTV Dhinakaran MLAசெந்தில் பாலாஜிடாக்டர் என். இளையராஜாதவெக எம்.எல்.ஏதிருவல்லிக்கேணி காவல்துறைபேரம்முன்ஜாமீன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் ஊழலற்ற தமிழகம் – வெறும் விளம்பர வாசகமா? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article ஃபிரிட்ஜ் மீது பொருட்களை வைக்கும் பெண் ஃபிரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வைத்தால் கடன் சுமை அதிகரிக்கும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி

கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடி…

ஜூலை 15, 2026

18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?

லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக்…

ஜூலை 15, 2026

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

You Might Also Like

தஞ்சாவூர் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு
தமிழ்நாடு

தஞ்சாவூர் நெல் கிடங்கு விபத்து: பெண் தொழிலாளி பலி, பாதுகாப்பு கேள்விக்குறி

தஞ்சாவூரில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

1 Min Read
சிவகாசி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் கொள்ளை: 4 பேர் கைது

சிவகாசி பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

1 Min Read
உதவி கலெக்டர் விஸ்வநாதன் விசாரணை மேற்கொள்ளும் காட்சி
தமிழ்நாடு

திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை

சேலம் மாவட்டம் மேச்சேரியில் திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 Min Read
தமிழ்நாடு

ஈரோட்டில் மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை: 2 வாலிபர்கள் கைது

ஈரோட்டில் மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு வாலிபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?