MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆனி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆனி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆனி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?

தமிழ்நாடு

ஆனி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 6:54 காலை
Fernandez
Share
ஆனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் காட்சி
ஆனி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் முறை
SHARE

இன்று ஆனி அமாவாசை தினமாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பன்னிரண்டு ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு தர்ப்பணம் செய்வதால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஆனி மாத அமாவாசை தினத்தில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்வதற்கு ராகு காலம், எமகண்டம் ஆகியவை பொருந்தாது என்றும், மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நேரம் என்றும் கூறப்படுகிறது.

தர்ப்பணம் கொடுக்கும்போது, தங்களின் கோத்திரம், குலதெய்வம் மற்றும் மூன்று தலைமுறைகளின் பெயர்களை அறிந்து சொல்வது அவசியம். தர்ப்பணம் செய்த பிறகு, வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, தெற்குப் பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சாற்ற வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, கார வகைப் பலகாரங்கள் மற்றும் பழ வகைகளை வைத்து குத்து விளக்கு ஏற்றி, தலைவாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். மேலும், இன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு தானமாக வழங்கலாம்.

தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னரே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைத் தொடரலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

புராணங்களின்படி, தர்ப்பைப் புல்லில் செய்யப்படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. பித்ரு வழிபாட்டில் கருப்பு எள்ளும், புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் உயர்ந்த சக்தி கொண்டவை.

எள், மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தினால் பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது நம்பிக்கை. தர்ப்பைப் புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரம் என்றும், இதன் சக்தியை மேலை நாட்டவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் உணர்ந்தார்கள் என்றும், ஆனால் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப் புல்லுக்கு பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தர்ப்பைப் புல்லின் இரு பக்கங்களில் பிரம்மாவும் சிவனும், நடுவில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் தர்ப்பைப் புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகிறது. கண்களுக்குத் தெரியாத ஒளி வடிவில் வரும் மூதாதையர்கள் தர்பைப் புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பைப் புல்லைத் தொடும்போது மானசீகமாக முன்னோர்களை வணங்கிவிட்டுத் தொட வேண்டும் என்கிறார்கள். பித்ருக்களுக்குக் கொடுக்கும் நீர் தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாகச் சென்றடையவும் தர்ப்பை புல்லே உதவியாக உள்ளது.

ஆனி மாதம் இறை வழிபாட்டிற்குச் சிறப்பான மாதமாகும். இந்த ஆனி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுப விஷயங்கள் பெருகும். தாமதமாகும் திருமணம் விரைவில் நடக்கும். வீண் பண விரயங்கள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Aani AmavasaiAncestorsPitru PoojaTharpanamஆனி அமாவாசைதர்ப்பணம்பித்ரு பூஜைமுன்னோர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஸ்ரேயாஸ் ஐயர், கம்பீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீகாந்த் ஆவேசம்
Next Article இரவு நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் இரவு நேர துரித உணவுகள்: உடல்நல பாதிப்புகள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர்…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா…

ஜூலை 14, 2026

மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்

பிரபல இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.

1 Min Read
தமிழ்நாடு

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை – விஜய் வழங்குகிறார் பணி ஆணை

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படவுள்ளது. முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் சென்று பணி…

1 Min Read
தமிழக அரசின் சமூக நீதி துறை பெயர் மாற்ற அரசாணை
தமிழ்நாடு

ஆதிதிராவிடர் நலத்துறை இனி சமூக நீதி துறையாக மாற்றம்!

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இனி அதிகாரப்பூர்வமாக சமூக நீதி துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அரசாணை…

2 Min Read
தமிழ்நாடு

கோவையில் விநாயகர் சிலையை திருட முயன்ற நபர் கைது!

கோவையில் விநாயகர் சிலையை திருட முயன்ற நபர், கோவில் நிர்வாகிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர், அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?