தமிழக வெற்றிக்கழகத் தலைவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விஜயின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை த.வெ.க. தலைவர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக, விழாவிற்கு வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய் கோட் சூட் அணிந்து மேடைக்கு வந்தபோது விழாவிற்கு வந்தவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
#WATCH | Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/vD48w4lJL1