MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு

லைஃப் ஸ்டைல்

சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு

Admin
Last updated: மே 10, 2026 10:26 காலை
Admin
Share
SHARE

சென்னை: கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை, புறநகரில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதனாலா, பூமி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது.

சென்னை, புறநகரில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில தினங் களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 7-ம் தேதி நள்ளிரவு மற்றும் 8-ம் தேதி காலை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, புறநகரில் நேற்று அதிகாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. காலையிலிருந்து லேசான தூரல் மழை பெய்தது.

இதனால், காலை முதலே மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலிலும் சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து, சாலையில் மழைநீர் ஓடியது.

சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், எண்ணூர், சோழிங்க நல்லூரில் தலா 2 செ.மீ, தண்டையார்பேட்டை, எம்ஜிஆர் நகர், பெரம்பூர், சைதாப்பேட்டை, சென்னை ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு: சென்னையில் மழை காரணமாக நேற்று மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடி யாமல், நடுவானில் வட்டமடித்து கொண்டிருந்தன. பெங்களூர், மும்பையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால், அந்த விமானங்களை பெங்களூருக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறிது நேரத்தில் வானிலை சீரானதும், விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.

அதேநேரம், சென்னையில் இருந்து அகமதாபாத், டெல்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் பலத்த மழையால் தாமதமாக புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா
Next Article CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்கள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் மீண்டும் கூட்டணி

சுமார் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி…

நவம்பர் 25, 2026

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விசுவாச நாய்

மத்திய பிரதேசத்தில், தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில்…

நவம்பர் 25, 2026

விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு வழக்கு: இலங்கை நபருக்கு ஜாமீன்

கேரளாவில் 2021ல் இலங்கை படகில் இருந்து 300…

நவம்பர் 25, 2026

ராஜீவ் காந்தி பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு

சோனியா காந்தி எழுதிய சுயசரிதை வெளியீட்டு விழாவில்,…

நவம்பர் 25, 2026

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும்…

நவம்பர் 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெகவின் புதிய முயற்சி: சொந்தமாக ‘வெற்றி தொலைக்காட்சி’ தொடக்கம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 'வெற்றி தொலைக்காட்சி' என்ற புதிய செய்தி சேனலைத் தொடங்குகிறது. இது அரசின் நலத்திட்டங்கள் மற்றும்…

1 Min Read
ஆரஞ்சு பழங்கள் நிறைந்த ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

ஆரஞ்சு பழம்: நோய்களைத் தடுக்கும் அற்புத சக்தி!

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து உண்பதால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம் மேம்பாடு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்கள் தடுப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள்…

1 Min Read

வசனமில்லா ‘சிங் கீதம்’ திரைப்படம்: ஜூன் 11 வெளியீடு

முழுவதும் பாடல்கள் மற்றும் மெல்லிசைகள் மூலம் உரையாடல்கள் இடம்பெறும் 'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று வெளியாகிறது. 94 வயது இயக்குநர் கே.விசுவநாத் சீனிவாச ராவ்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரிட்டன் பாதுகாப்பு நிதி சர்ச்சை: அமைச்சர் ஜான் ஹீலி ராஜினாமா!

ரஷ்ய அச்சுறுத்தல் சூழலில் பாதுகாப்பு நிதி போதாமையால் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜான் ஹீலி ராஜினாமா செய்துள்ளார். இது ஸ்டார்மர் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?