MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

Admin
Last updated: மே 10, 2026 10:26 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட முடியாது. 2 முக்கிய கட்டங்களை கடந்த பிறகுதான் ஆட்சியை தொடங்க முடியும்.

த.வெ.க. அரசு 13-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் உடனடியாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும். சபாநாயகர் ஒருவரை அரசு முன்மொழிந்த பிறகு, அவருக்கு எதிராக வேறொரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், போட்டி நிலவும். அப்போது எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார்.

போட்டியில்லாவிட்டால், அரசால் அறிவிக்கப்பட்ட சபாநாயகரின் இரு கைகளையும் முதல்-அமைச்சர் விஜயும், எதிர்க்கட்சித் தலைவரும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து அன்றோ அல்லது மற்றொரு நாளிலோ (13-ந் தேதிக்குள்) அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய, அதன் மீது முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றி அனைவரது நம்பிக்கையையும் கோருவார். அதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்.எல்.ஏ.க்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வரச் செய்வதற்கான மணியோசை 3 முறை ஒலிக்கப்படும்.

அதன் பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்.எல்.ஏ.க்களிடம் சட்டசபை செயலாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார். (முதல்-அமைச்சர் முதல் டிவிஷனில் இருப்பார், அவருக்கு நேர் எதிரேயுள்ள 6-ம் டிவிஷனில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்).

அந்த வகையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக் கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும்.

பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். அரசுக்கு தேவையான பெரும்பான்மை ஒன்றிரண்டு ஒட்டுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆளும் கட்சி மற்றும் கூட்ட ணிக் கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அன்று தவறாமல் வாக்கெடுப்புக்காக அவைக்கு வருவது மிகமிக அவசியமாகும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து- சீமான்
Next Article சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோவையில் சிறுமி கொலை: சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னையில் ஒரே நாளில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?