MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2022 தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2022 தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 2022 தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு

2022 தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Admin
Last updated: ஜூலை 4, 2026 11:54 காலை
Admin
Share
அமைச்சர் மரியவில்சன் நீதிமன்ற உத்தரவு
அமைச்சர் மரியவில்சன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு
SHARE

புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் அமைச்சர் மரியவில்சனின் தம்பி மரிய குளோத்தின் வீடு அமைந்துள்ளது. அமைச்சர் மற்றும் அவரது தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, மரிய குளோத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை மற்றும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அந்த தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு லாஸ்பேட்டை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையில், ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தனது தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நீதிமன்ற வாய்ந்தாவுக்கு அமைச்சர் மரியவில்சன் ஆஜராகாத நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற முதன்மை குற்றவியல் நடுவர் சேரலாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 1-ல் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அமைச்சர் மரியவில்சன் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெறுவதால் அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஜூலை 10 ஆம் தேதி அமைச்சர் மரியவில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Attack CaseCourt OrderMariwilsonPuducherryஅமைச்சர்தாக்குதல் வழக்குநீதிமன்றம்புதுச்சேரிமரியவில்சன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரிடம் பாஜக புகார்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி பங்கேற்பு குறித்து…
Next Article சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்த அறிவிப்பு பலகை சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட 10-ம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீயின் புகைப்படம்
தமிழ்நாடு

சேலத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை: 30 மாத்திரைகள் உட்கொண்ட சோகம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் 10-ம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீ, 30 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர்…

2 Min Read
தமிழ்நாடு

நீலகிரி கேரட் விலை உயர்வு: விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரம்

நீலகிரியில் கேரட் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்டு விவசாயிகள் அறுவடைப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1 Min Read
கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ மக்கள் பிரதிநிதியாக உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

மக்களுடன் என்றும் உழைப்பேன் – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ

மக்கள் பிரதிநிதியாக என்றும் உங்களுடன் தோளோடு தோள் நின்று உழைப்பதே எனது லட்சியம் என்று கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே முதன்மையான நோக்கம்…

1 Min Read
தமிழக முதல்வர் விஜய் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தல்
தமிழ்நாடு

தமிழகம் மகிழ்ச்சியில் உள்ளது – நிதியமைச்சர் மரிய வில்சன் பேட்டி

தமிழக முதல்வர் விஜய் சுதந்திர தினத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலம் மகிழ்ச்சியில் இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேட்டி.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?