MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: TVS iQube ST: ஒரே சார்ஜில் 212 கி.மீ மைலேஜ், விலை என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: TVS iQube ST: ஒரே சார்ஜில் 212 கி.மீ மைலேஜ், விலை என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - TVS iQube ST: ஒரே சார்ஜில் 212 கி.மீ மைலேஜ், விலை என்ன?

ஆட்டோமொபைல்

TVS iQube ST: ஒரே சார்ஜில் 212 கி.மீ மைலேஜ், விலை என்ன?

Fernandez
Last updated: ஜூலை 4, 2026 10:45 காலை
Fernandez
Share
TVS iQube ST இ-ஸ்கூட்டர்
TVS iQube ST இ-ஸ்கூட்டர்
SHARE

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், தனது மின்சார வாகனப் பிரிவில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனம் தனது iQube இ-ஸ்கூட்டரின் டாப் வேரியண்டான iQube ST 5 kWh மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய மைலேஜை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

TVS iQube ST 5 kWh மாடலின் விலை 1 லட்சத்து 83 ஆயிரத்து 841 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 82 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. முழுமையாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 4.18 மணி நேரம் ஆகிறது. இந்த இ-ஸ்கூட்டர் சந்தன-அரக்கு, நீலம்-சந்தன மற்றும் சாம்பல் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இருக்கை உயரம் 770 மி.மீட்டர். மேலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 33 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. வெறும் 4.2 வினாடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. இது எகோ மற்றும் பவர் என இரண்டு விதமான மோட்களில் இயங்கக்கூடியது. மேலும், பிஎல்டிசி ஹப் மவுண்டட் மோட்டார் வசதியும் இதில் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, iQube ST மாடலில் ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங் வசதி உள்ளது. இதில் ஒரே ஒரு நிரந்தர லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதியும் உண்டு. எஸ்.பி.டி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் ட்ரம் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு சக்கரங்களிலும் 12 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் அமைப்பைப் பார்த்தால், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் ஹைட்ராலிக் ட்விட் ட்யூப் ஷாக் அப்சார்பர் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 157 மி.மீட்டர் ஆகும். 130 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டியும், மோட்டாருக்கு 3 வருடங்கள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஸ்கூட்டரில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி ஆகியவை உள்ளன. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், மற்றும் 2 ட்ரிப்மீட்டர்கள் உள்ளன. ஸ்டாண்ட் அலாரம், குறைந்த பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

கூடுதலாக, கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், செல்ஃப் ஸ்டார்ட், சைட் ஸ்டாண்ட் என்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி, ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதி, மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற நவீன வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பேட்டரி நிலை மற்றும் லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற தகவல்களையும் இதன் மூலம் அறியலாம். எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிக்கி வசதி 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Electric ScooteriQube ST 5 kWhTVS iQube STTVS Motorமின்சார ஸ்கூட்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
Next Article தக்காளி விவசாயி ஒருவர் தனது விளைச்சலைப் பார்த்துக் கவலைப்படும் காட்சி தக்காளி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் ஆழ்ந்த கவலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசும் காயமடைந்த நபர்

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சி: உயிருக்கு ஆபத்து என பரபரப்பு

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாகவும், கர்நாடக வனத்துறையினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்…

ஆகஸ்ட் 18, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பேரழிவு: 12 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் 28 மாவட்டங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

முதல் மனைவியை கைவிட்ட அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை

முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல்…

ஆகஸ்ட் 18, 2026

மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்: லாரி மோதி 8 பேர் பலி, 32 காயம்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சென்ற டெம்போ மீது…

ஆகஸ்ட் 18, 2026

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

TVS X மின்சார ஸ்கூட்டர்: 140 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!

TVS X மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ மைலேஜ், மணிக்கு 105 கி.மீ வேகம். விலை ரூ. 2,80,282.

2 Min Read
எம்ஜி விண்ட்சர் EV காரின் வெளிப்புறத் தோற்றம்
ஆட்டோமொபைல்

MG Windsor EV: 15,000 கி.மீ ஓட்டிய அனுபவம் – வாங்கலாமா? வேண்டாமா?

எம்ஜி விண்ட்சர் EV காரை 15,000 கி.மீ ஓட்டிய அனுபவம். நீண்ட காலப் பயன்பாட்டில் இதன் நிறைகள், குறைகள் மற்றும் செயல்திறன் குறித்த விரிவான அலசல்.

2 Min Read

டாடா பஞ்ச் கார்: EMI எவ்வளவு? அசத்தல் பிளான் இதோ!

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரை EMI-ல் வாங்க திட்டமா? சென்னையில் மாத EMI எவ்வளவு வரும்? முழு விவரங்கள் இதோ!

2 Min Read
கியா 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி காரின் புகைப்படம்
ஆட்டோமொபைல்

கியாவின் புதிய 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி விரைவில் அறிமுகம்!

கியா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் ஹைப்ரிட் கார் மாடல், வரும் தீபாவளி பண்டிகை சீசனில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 4 ஸ்டார்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?