MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தமிழ்நாடு

உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூலை 2, 2026 5:11 மணி
Admin
Share
SHARE

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திமுக அரசுதான் காவல்துறையை ஏவி மக்களைக் கொன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றது திமுக அரசு. எங்கள் தலைவர் மீது கை வைத்ததற்கும், உங்கள் மகன் உதயநிதியின் அரசியல் வாழ்விற்காக எங்கள் மக்களைக் காவல்துறை மூலம் கொன்று குவித்ததற்கும் நிச்சயம் விரைவில் பதிலடி கொடுப்போம்' என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், 'கரூர் கண்ணீர் பாவத்திற்கு.. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்.. நீங்கள் விட்ட கண்ணீர் கரூர் மக்களுடையது. நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதல்வர். கரூருக்கு அப்புறம் எங்களின் பரம எதிரி திமுக தான்' என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்றோர் திமுகவோடு சேரக்கூடாது என்று கூறியபோதும், பழனிசாமி அதை கேட்கவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தைரியமாக தவெகவில் இணைந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் உள்ள 60% பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதாகவும், இனி அதிமுக காகித அளவில் தான் இருக்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முதல் இரண்டரை வருடம் இபிஎஸ் முதலமைச்சராகவும், அடுத்து உதயநிதி முதலமைச்சராகவும் வருவார்கள் என்றும் அவர் கணித்தார். இபிஎஸ்-ன் துரோகம், சூழ்ச்சியால் இனி அதிமுகவில் இபிஎஸ்ஸும், அவரது மகனும் மட்டுமே இருப்பார்கள் என்றும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் சேலையை பேரவையில் வைத்து இழுத்தவர்களுடன் கூட்டணி வைக்க பேசி உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே இபிஎஸ் மறந்துவிட்டார் என்றும், அந்தந்தத் தொழில் செய்பவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்றும், திமுகவால் இருந்த சூழல் இப்போது தவெகவால் இருக்கிறதா என்றும், இந்த மாற்றத்தை திமுகவால் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்கரூர்தமிழ்நாடு அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகிய விஜயபாஸ்கர்: ‘வலிகளையும் ரணங்களையும் சுமந்து வந்தோம்’
Next Article மேகதாது அணை: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாரதிய ஜனதா கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு

பாஜக தேசிய நிர்வாகிகள்: 65-ல் 12 பெண்கள் நியமனம்

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: 65 பேரில் 12 பெண்கள் நியமனம்.…

ஆகஸ்ட் 17, 2026

மேற்குவங்க ஓட்டல் தீ விபத்து: 6 பக்தர்கள் உயிரிழப்பு

மேற்குவங்காளத்தின் தரபதி கோவில் அருகே ஓட்டலில் பயங்கர…

ஆகஸ்ட் 17, 2026

பிஹார் கோயில் விபத்து: 7 பக்தர்கள் பலி, 10 பேர் காயம்

பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக்…

ஆகஸ்ட் 17, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு…

ஆகஸ்ட் 17, 2026

இந்தியா-தாய்லாந்து ராணுவ பயிற்சி: சூரத் தனியில் நாளை தொடக்கம்

இந்தியா-தாய்லாந்து இடையே 15வது கூட்டு ராணுவப் பயிற்சி…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
தமிழ்நாடு

பிரதமரின் பேச்சு உத்வேகம் அளிக்கிறது: ஸ்ரீதர் வேம்பு நெகிழ்ச்சி

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை இந்திய நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றார்.

2 Min Read
அரசியல்தமிழ்நாடு

கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்வு விழா நடைபெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார் இதனை தொடர்ந்து…

1 Min Read
தேனியில் நகை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்
தமிழ்நாடு

தேனியில் 139 சவரன் நகை மோசடி: பெண் ஊழியர் கைது

தேனியில் 139 சவரன் நகைகள் மோசடி வழக்கில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி
தமிழ்நாடு

அரசியல் விமர்சனம் தரத்துடன் இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி

அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகவும், தரம் குறையாமலும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?