MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை
க்ரைம்

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை

Admin
Last updated: June 30, 2026 4:11 pm
Admin
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது தொடர்பாக போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பார்த்திபன் (19) மற்றும் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி திவ்யதர்ஷினி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். இன்று காலை இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் என 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டது போல் உள்ளதாகவும், இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தங்களது மகனைப் பெண் வீட்டாரே அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பார்த்திபனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆணவக்கொலைகாதல் ஜோடிதரங்கம்பாடிபோக்சோமயிலாடுதுறைவன்கொடுமை தடுப்பு சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபோன் 17 ப்ரோ: ரூ.22,000 அதிரடி தள்ளுபடி – முழு விவரம்!
Next Article புதிய சுஸுகி GSX250R ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

You Might Also Like

க்ரைம்

படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பைக்குகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில்…

1 Min Read
க்ரைம்

காஞ்சி: 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக 169 சரித்திர…

1 Min Read
க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் குபேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

மதுரை: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது

மதுரை அருகே 17 வயது பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மெக்கானிக் முத்துமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவி 7 மாத…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?