MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி
லைஃப் ஸ்டைல்

கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி

Admin
Last updated: May 9, 2026 4:27 pm
Admin
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் சதமடித்து வருகிறது கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கருக்காடிப்பட்டி, மேலத்தோப்பு, செங்கமேடு, பத்துதாக்கு, அம்மையாண்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி 1997-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 24 மாணவர்கள், 28 மாணவிகள் என 52 பேர் எழுதினர்.

இதில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 2015-ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் எல்.ராஜகுமாரன் கூறியது: ஒரத்தநாடு வட்டத்தில் முழுவதும் கிராமப் பின்னணியில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களின் முழு அர்ப்பணிப்பும், கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்- ஆசிரியர்கள் கழகம், முன்னாள் மாணவர் களின் ஒத்துழைப்பு தான்.

பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து உயர்கல்வியை பயின்று வருகின்றனர். 2024-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவி நீட் தேர்விலும் தேர்ச்சியடைந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை தமிழகத்தின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் படிக்க வைத்து வருகிறோம் என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.வுக்கு ஆதரவா?- இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.சி.க
Next Article கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மாநகர பேருந்து மோதி விபத்தில் பலியான பெயின்டர் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சம் இழப்பீடு

மாநகர பேருந்து மோதிய விபத்தில் பலியான பெயின்டரின் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சத்தை இழப்பீடாக வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஜோதிட நாள்காட்டி 10.05.2026 | சித்திரை 27 – ஞாயிற்றுக்கிழமை

நல்லதே நடக்கும் | 10.05.2026 | பராபவ - சித்திரை 27 | ஞாயிற்றுக்கிழமை திதி: அஷ்டமி பிற்பகல் 3.07 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: அவிட்டம்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?