MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை

லைஃப் ஸ்டைல்

“தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை

Admin
Last updated: மே 9, 2026 3:56 மணி
Admin
Share
SHARE

சென்னை: கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தொடர்ந்து மூன்று முறை முழுமையான எண்ணிக்கை இல்லாத காரணத்தினால், விஜய் ஆளுநரை சந்தித்த பிறகும் ஆளுநர் அவரை திருப்பி அனுப்பியிருக்கிறார். நீங்கள் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையோடு வாருங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என ஆளுநர் மாளிகை தெளிவாகச் சொல்கிறது. எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

இத்தனை மதிப்பெண்கள் வாங்கினால் தான் தேர்வாக முடியும் என்ற தேர்வு இருக்கும்போது, அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் எனச் சொல்வது தவறு; அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.

தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டு, அதற்கு பின்னால் இருந்து பல முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆக, வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லாரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் ஆதரவை தெரிவித்துவிட்டு, மத்தியில் இருந்து பாஜக ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது என சொல்கிறார்கள்; அதிலும் உண்மை இல்லை. திருமாவளவனின் ஆதரவுக்காக காத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக திமுகவிடமிருந்து தனது நட்பை முறித்துக் கொண்டது. இவர்களெல்லாம் அரசியல் சுயலாபத்துக்காக முடிவுகளை எடுத்துவிட்டு ஆளுநர் மீதும், பாஜக மீதும் பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதனிடையே, தனது மற்றொரு எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது. அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை…உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும் வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும் ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கு வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா
Next Article அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

காமராஜர் பிறந்தநாள் சிறப்பு ஆன்லைன் போட்டிகள் அறிவிப்பு
லைஃப் ஸ்டைல்

மாணவர்களே அசத்தலாம்: காமராஜர் பிறந்தநாள் சிறப்பு ஆன்லைன் போட்டிகள்!

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எளிமையான பதிவு நடைமுறையுடன், சில நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் வழங்கப்படும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரோலண்ட் கேரோஸ் சாம்பியன் ஸ்வெரேவை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது முதல் ரோலண்ட் கேரோஸ் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை மனதாரப் பாராட்டியுள்ளார். ஸ்வெரேவின் திறமையையும், கடின…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் விரைவில் வர பப்பாளி பழம் சாப்பிடலாமா?

மாதவிடாய் விரைவில் வர ஆங்கில மருந்துகளை தவிர்த்து, இயற்கையான உணவுகள் மூலம் எப்படி மாதவிடாயை வரவழைக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம். பப்பாளி, ஓமம், எள், அன்னாசி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதப் பழங்கள்!

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் தர்பூசணி மற்றும் கிவி பழங்களின் நன்மைகள் பற்றிய விரிவான தகவல்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?