MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமாவளவன் உடனடியாக த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்..!- ராமதாஸ் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருமாவளவன் உடனடியாக த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்..!- ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு

திருமாவளவன் உடனடியாக த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்..!- ராமதாஸ் வலியுறுத்தல்

Admin
Last updated: May 9, 2026 3:55 pm
Admin
Share
SHARE

தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியத்தில் அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது.

இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக ஆளுநர் அவர்கள் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது ஆளுநர் அவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. ஆளுநர் அவர்களை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக ஆளுநரை இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க வை ஆட்சி அமைக்க ஆளுநர் அவர்கள் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவர்கள் விஜயை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் அவர்கள் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து
Next Article ”விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு” – டிடிவி தினகரன் காட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,…

June 26, 2026

மேற்கு வங்கத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்…

June 26, 2026

கேரளாவில் ரூ.25 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: இளைஞர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் கொண்டோடியில் ரூ.25 லட்சம்…

June 26, 2026

ராமர் கோவில் நன்கொடை மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு…

June 26, 2026

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி வெற்றிக்கு எதிரான வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை

திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு

மேகதாது அணை திட்டத்திற்கு தடை கோரி, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு மீண்டும் முக்கிய பதவி

அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தங்கமணி உள்ளிட்ட பலர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் அருகே பிளஸ்-2 கணிதத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?