திருமண நிகழ்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளம் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்த நிலையில், தவெகவின் ஐடி பிரிவு தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.
'திருமணம் நடக்கும் இடத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தி, ஓரளவு அரசியல் பேசினால் பரவாயில்லை. ஆனால், ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியா?' என தவெக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 'டீம்கா ஆட்சியில் இருந்தபோது உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்துவிட்டதா?' என்றும் விமர்சித்துள்ளது.
இதனால் தான் தற்போது எதற்கெடுத்தாலும் சினிமா, ஷூட்டிங் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஐந்து ஆண்டுகளாக சினிமாவை சுருட்டி வைத்திருந்த சிவப்பு பூதம், இப்போது ஏதோ சித்தாந்தம் பேசுவது போல் பேசினால் சிரிப்பாக இருக்கிறது. மக்கள், இளைஞர்கள், பெண்கள் ஏன் குழந்தைகள் மீதும் வன்மத்தை கொட்டிய நீங்கள், இப்போது சினிமா மீதும் கொட்ட ஆரம்பித்தது ஏன்? சிவப்பு பூதம் சிதைந்துவிட்டதா? இனி சினிமாவைக் கொண்டும் பணம் பார்க்க வழி இல்லை என்ற எரிச்சலா? என்று தவெக ஐடி பிரிவு குறிப்பிட்டுள்ளது.
'போங்கள், வேறு எங்காவது டீம்கா கிளையைத் தொடங்கும் வியாபாரத்தைப் பாருங்கள்' என்று தவெக ஐடி பிரிவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. திருமண வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது.