MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > “இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு
லைஃப் ஸ்டைல்

“இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு

Admin
Last updated: May 9, 2026 8:26 am
Admin
Share
SHARE

சென்னை: இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

I now understand what they meant when they said they are bringing “change” to TN politics – Tamil Nadu hasn’t seen horse trading attempts like this in many years!All this even before taking charge! https://t.co/Bl7nm2CtD4

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

இந்தச் சூழலில் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் டிடிவி தினகரன்., தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் கட்சியின் எம்எல்ஏவான காமராஜ், அதிமுகவை ஆதரிப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.

பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏ-வை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரைக் காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் அமமுக எம்எல்ஏ காமராஜ். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.

அப்போது பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், “நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து காமராஜ் தனது கைப்பட கடிதம் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்
Next Article குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவுவிழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது – சிபிஎம் பரபரப்பு பேட்டி

டெல்லியில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும. * எஸ்.ஆர்.…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

இனி கிளட்ச் பிடிக்கவே வேண்டாம் – ஹோண்டாவின் வினோதமான புதிய பைக் அறிமுகம் – விலை எவ்வளவு?

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, சாகச ஆர்வலர்களுக்காக புதிய NX500 மாடலை ஈ-கிளட்ச் வேரியண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.44 லட்சத்தில்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல். நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?