கோவையில் அப்துல்கலாம் பெயரில் அறநெறி மற்றும் அரசியல் மையம் ஆகஸ்ட் 15 அன்று திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து, அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 'வி தீ லீடர்ஸ்' அமைப்பு களமிறங்கியுள்ளது. தன்னார்வலர்கள் தினமும் இணைந்து வருகின்றனர்.
'நாம் இந்தியர்கள், நாம் தமிழர்கள்' என்ற ஒற்றைக் கருத்துடன், அனைத்து இன, மத, ஜாதி வேறுபாடுகளையும் கடந்து, இந்தியா மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும், அதில் தமிழகம் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறோம். பிரிட்டனில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் 'வி தீ லீடர்ஸ்' அமைப்பில் இணைய விரும்புவோர் www.wetheleader.org என்ற இணையதளத்தில் இணையலாம்.
ஜூலை 1 முதல் 'வி தீ லீடர்ஸ்' அமைப்பின் களப்பணி தொடங்க உள்ளது. ஜூலை மாதம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் களமிறங்க உள்ளோம். அரசு மீது பழி சுமத்தாமல், நாங்கள் களப்பணியில் ஈடுபடுவோம். ஜூலை முதல் வாரத்தில் மொபைல் செயலி வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.