MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தமிழ்நாடு

ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

Admin
Last updated: ஜூன் 25, 2026 10:05 மணி
Admin
Share
SHARE

நடப்பு 2026 ஆம் ஆண்டு குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 2026-2027ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், குறுவை பருவத்தில் மாநிலத்தின் மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார்/குறுவை/சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை 'நெற்பயிர்' பயிரிடப்பட்டுள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை இன்று (25/06/2026) முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2026 ஆகும். இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் 2026 ஜூலை 31 ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன. எனவே, கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள 'விவசாயிகள் கார்னர்' வாயிலாகவும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி 31.07.2026. எக்காரணத்திற்காகவும் இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crop InsuranceTamil Naduதமிழ்நாடுபயிர் காப்பீடுவிவசாயிகள்வேளாண்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article என்எல்சி பங்குகள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
Next Article பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மூவர்ணக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கிறார்

வீடுதோறும் மூவர்ணக்கொடி: பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு…

ஆகஸ்ட் 10, 2026

வெளிநாட்டு நன்கொடை மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்…

ஆகஸ்ட் 10, 2026

டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசியமாக படம் பிடித்த நபர் சிக்கினார்

டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளை ரகசியமாக வீடியோ…

ஆகஸ்ட் 10, 2026

புனேவில் விமான விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பாராமதி விமான…

ஆகஸ்ட் 10, 2026

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இயக்குநர் ஹெச். வினோத் ஜனநாயகன் படம் குறித்து விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

ஜனநாயகன் பட சைகை: முதல்வர் விஜய்க்கு முன்பே படத்தில் இருந்தது – இயக்குநர் ஹெச்.வினோத்

ஜனநாயகன் திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த சைகை படத்தில் இடம்பெற்றிருந்ததாக இயக்குநர் ஹெச். வினோத் விளக்கமளித்துள்ளார். மேலும் படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்ததும்…

1 Min Read
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 இலச்சினை
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் இலச்சினையில் ‘ரூ’ குறியீடு தொடர்கிறது!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இலச்சினையில், இந்திய ரூபாய் குறியீடான 'ரூ' இடம்பெற்றுள்ளது. இது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

1 Min Read
தங்கம் விலை உயர்வைக் காட்டும் காட்சி
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று ₹240 உயர்ந்து ஒரு சவரன் ₹1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே 600 கிராம் கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?