MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026: “அதை தாங்கும் மனநிலை எங்களுக்கு இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு”.. அக்சர் வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > IPL 2026: “அதை தாங்கும் மனநிலை எங்களுக்கு இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு”.. அக்சர் வேதனை
விளையாட்டு

IPL 2026: “அதை தாங்கும் மனநிலை எங்களுக்கு இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு”.. அக்சர் வேதனை

Admin
Last updated: May 9, 2026 7:26 am
Admin
Share
SHARE

டெல்லி: சொந்த மண்ணில் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி பரிதாப நிலையில் நிற்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஒட்டுமொத்தமாக சொதப்பிய டெல்லி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான தோல்வியை தழுவியது. இந்த படுதோல்விக்கான முக்கிய காரணம் என்ன என்பதை டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மிகுந்த வேதனையுடன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் (23) மற்றும் பதும் நிசங்கா (50) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.

ஆனால், அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா (8), சமீர் ரிஸ்வி (3), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (2) என வரிசையாக வெளியேறினர். கேப்டன் அக்சர் படேல் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அசுதோஷ் ஷர்மா மட்டும் ஓரளவுக்கு போராடி 39 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

143 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஏமாற்றம் அளித்தனர். ஆனால், மறுபுறம் ‘புயலாக’ மாறிய பின் ஆலன், டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்குத் துணையாக கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டம் ஆடிய பின் ஆலன் வெறும் 47 பந்துகளில் சிக்ஸருடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். முடிவில் கொல்கத்தா அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் அக்சர் படேல், “நாங்கள் நிர்ணயித்த இலக்கு மிகவும் குறைவு. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வெறும் 2 அல்லது 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. விக்கெட்டுகள் சரியும்போது அழுத்தத்தை கையாளும் மனநிலை எங்களிடம் இல்லை. இந்த தோல்வியின் மூலம் எங்களது பிளே ஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அடுத்த ஆண்டுக்கான அணியைத் தயார் செய்வதில் கவனம் செலுத்துவோம்” என விரக்தியுடன் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: இவங்க செய்யும் காரியத்துக்கு மைக்கை தூக்கி வீசிவிடுவேன்”.. பாண்டிங் ஆவேசம்.. என்ன நடந்தது?
Next Article உலகக்கோப்பை நாயகனுக்குப் பிறந்த ‘குட்டி தேவதை’.. தந்தை ஆனார் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், மறுபுறம் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி பல…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கும் பாக்ஸ் ஆபீஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.. அஸ்வின்

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழ்ந்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில்…

3 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்... தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!Published by:Last Updated:Mar 27, 2026 7:23 AM ISTஐபிஎல் தொடரில் இதுவரை…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?Published by:Last Updated:May 06, 2026 1:43…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?