MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!

விளையாட்டு

126 பந்துகளில் 306 ரன்கள்: அக்சரா குப்தா உலக சாதனை!

Admin
Last updated: ஜூன் 18, 2026 4:15 மணி
Admin
Share
SHARE

மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு காணாத வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட வீராங்கனை அக்சரா குப்தா, வெறும் 126 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளார். பீகார் கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம் பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் களமிறங்கிய ரக்ஸால் பகுதியைச் சேர்ந்த அக்சரா குப்தா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மைதானத்தில் 233 நிமிடங்கள் நிலைத்து நின்று விளையாடிய அவர், 242.86 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 126 பந்துகளில் 306 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அக்சரா குப்தாவின் இந்த அசாத்திய இன்னிங்ஸில் 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பவுண்டரிகளாக விளாசிய அவர், வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தையும், 34 பந்துகளில் சதத்தையும் கடந்து மிரட்டினார்.

அக்சரா குப்தாவின் இந்த இமாலய சாதனையைப் பாராட்டிய பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ஜியாவுல் அர்பின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தின் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்து வருவதாகவும், இந்த தொடக்க ஆட்டத்திலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பீகார் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகிறது என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக, இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் மும்பையைச் சேர்ந்த ஐரா குப்தா மாநில அளவிலான போட்டியில் 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. தற்போது அவருக்கு அடுத்தபடியாக அக்சரா குப்தா 306 ரன்கள் குவித்து மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக பீகாரில் இருந்து வந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது மகளிர் கிரிக்கெட்டிலும் அதே போல அக்சரா குப்தா அதிரடியாக 300 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இதை அடுத்து பீகார் கிரிக்கெட் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BiharCricketRecordகிரிக்கெட்சாதனைபீகார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!
Next Article மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விமானி ஸ்மித் மச்சார் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ள குஜராத் பெண்கள்

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள விமானி ஸ்மித் மச்சார்-ன் உருவத்தை…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கோப்பையுடன் கொண்டாடும் காட்சி
விளையாட்டு

ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து முதலிடம் பிடித்தது இந்தியா!

ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

2 Min Read
விளையாட்டு

சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன்? வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷனை நீக்கி வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டுமா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து…

1 Min Read
விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் அசத்திய இவர், பல…

2 Min Read
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி
தமிழ்நாடு

வினோத் காம்ப்ளியின் உடல்நிலை: ரசிகர்கள் மத்தியில் கவலை!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தானேவில் உள்ள முதியோர் இல்லத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?