MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்கு: தமிழக அரசியலில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்கு: தமிழக அரசியலில் பரபரப்பு
லைஃப் ஸ்டைல்

அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்கு: தமிழக அரசியலில் பரபரப்பு

Admin
Last updated: June 17, 2026 6:17 am
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செங்கோட்டையன், திமுக வேட்பாளர் நல்லசிவத்தை 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பிரபு 56,232 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

செங்கோட்டையனின் வேட்புமனுவில், சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதாகவும், எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டது முறையற்றது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செங்கோட்டையனின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதேபோல், லால்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் லீமா ரோஸின் வெற்றியையும் எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். லீமா ரோஸ் ஏழு நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், அதிமுக துண்டு அணிந்து தேவாலயங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை தொகுதியில் 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ முத்துராஜாவின் வெற்றியையும் எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தனை அதிகமான மனுக்களை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Election PetitionTamil Nadu Politicsசெங்கோட்டையன்சென்னை உயர்நீதிமன்றம்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்கு: தமிழக அரசியலில் பரபரப்பு
Next Article உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத மூலிகைப் பொடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக…

June 17, 2026

வீடு தாமதமானால் வங்கிகள், பில்டர்களே பொறுப்பு – அதிரடி அறிவிப்பு

வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான கடன்…

June 17, 2026

ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை…

June 17, 2026

இந்திய தெரு விளையாட்டான கிட்டி புல் உலக அளவில் பிரபலமாகிறது

இந்தியாவின் தெருக்களில் விளையாடப்படும் கிட்டி புல் விளையாட்டு,…

June 17, 2026

வீட்டுக் கடனுக்கு காப்பீடு கட்டாயம் இல்லை: ரிசர்வ் வங்கி அதிரடி

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்கக்…

June 17, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பிரெஞ்சு ஓபன்: ஸ்வரேவ் மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விருச்சிக ராசி: இன்றைய ராசிபலன் – ஜூன் 11, 2026

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்களும் புகழும் குவியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் பதவி குறித்து கருத்து திரித்து வெளியிடப்பட்டது: அமைச்சர் கண்டனம்

தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்-அமைச்சர் பொறுப்பேற்பது குறித்து தான் கூறிய கருத்துக்கள் திரித்து வெளியிடப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய வழக்கு: பொன்ராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மீது, த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?