MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி

விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி

Admin
Last updated: ஜூன் 16, 2026 10:15 காலை
Admin
Share
SHARE

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரரைத் தள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலுக்கு, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே கூறிய வார்த்தைகளே காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான போட்டியில், சூப்பர் ஓவர் முடிவில் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்து வெளியேறிய 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, 'போட்டி முடிந்துவிட்டது… இனி நீ வீட்டுக்குப் போ!' என்று இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த வீரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதிப்படி தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த மோதலுக்குப் பிறகு, இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிலும் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாத போதும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டதால், இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சில இலங்கை வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்மையில், போட்டி 265 ரன்களுடன் டையில் முடிந்ததும், போதிய வெளிச்சமின்மையால் இலங்கை அணி விளையாட மறுத்தது. ஆனால், இந்திய கேப்டன் திலக் வர்மா வற்புறுத்தியதால்தான் நடுவர்கள் சூப்பர் ஓவரை நடத்தினர். வெளிச்சம் மிக மோசமடைந்த போதும் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தவில்லை. இது குறித்துப் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், 'இங்கு சூப்பர் ஓவர் ஆட்டத்தை நடத்தியிருக்கவே கூடாது' என்றார்.

இப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு நடுவர்களின் மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவும் முக்கிய காரணமாகும். இந்திய ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் பிட்ச்சின் ஆபத்தான பகுதியில் ஓடியதாகக் கூறி, நடுவர்கள் பிரகீத் ரம்புக்வெல்லா மற்றும் சாந்தா பொன்சேகா ஆகியோர் இந்திய அணிக்கு 10 ரன்கள் அபராதம் விதித்தனர். இதனால், இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு முன்பே அவர்களது கணக்கில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த 10 ரன்களே இறுதியில் ஆட்டம் டையில் முடிவதற்கும், இந்தியாவின் தோல்விக்கும் முக்கிய காரணியாக அமைந்தது. எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. விதிகளை மீறிய செயல்.. ஐசிசி தண்டனை கிடைக்க வாய்ப்பு.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricketஇந்தியா ஏஇலங்கை ஏகிரிக்கெட்சூப்பர் ஓவர்வைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
Next Article இலங்கை மைண்ட் கேம்: தம்புள்ளா சர்ச்சை குறித்து அஸ்வின் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

விளையாட்டு

திருமண ஆசை காட்டி பாலியல் துஷ்பிரயோகம்: பிரபல ஐபிஎல் வீரர் மீது புகார்

டெல்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் மீது பாலியல் புகார். திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்டு ஏமாற்றியதாக பெண் பரபரப்பு குற்றச்சாட்டு. தாக்குதல், கொலை மிரட்டல்…

2 Min Read
விளையாட்டு

தோனி இல்லை! சிஎஸ்கே டாஸ் வென்று பேட்டிங்: ரசிகர்கள் ஏமாற்றம்!

தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்கிறது. பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் மோதுகின்றன.

2 Min Read
விளையாட்டு

ஆஸ்திரேலியா vs வங்கதேசம்: சட்டோகிராமில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

சட்டோகிராமில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. மேட் ரென்ஷா 89 ரன்கள் குவித்தார்.

1 Min Read
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
விளையாட்டு

லாபுசேனை நீக்க வேண்டிய நேரம்: ரிக்கி பாண்டிங் கருத்து

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தொடர்ந்து சொதப்பி வரும் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேனை அணியிலிருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?