MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!

லைஃப் ஸ்டைல்

சென்னையில் அதிர்ச்சி: ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி லீஸ் மோசடி!

Admin
Last updated: ஜூன் 14, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

சென்னையை உலுக்கியுள்ள லீஸ் மோசடி சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் வெண்ணிலா, ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரியில் வீடு லீசுக்கு தேடியுள்ளார். அப்போது OLX இணையதளத்தில் 7 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு இருப்பதை பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். வீட்டை நேரில் பார்த்து பிடித்த வெண்ணிலா, அக்பர் ஷெரிப் என்பவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஒரு வாரத்தில் வீட்டை பெயிண்ட் அடித்து தருவதாகக் கூறிய அக்பர் ஷெரிப், பல வாரங்கள் ஆகியும் வீட்டை தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெண்ணிலா, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷெரிப், கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் சேர்ந்து இந்த துணிகர மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவரும், காவல் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கோடி கோடியாக மோசடி செய்துவிட்டு பள்ளிக்கரணையில் பங்களா கட்டுவதாகக் கூறும் மக்கள், சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் விலைபோய்விட்டதாகவும், மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசடியை காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர். லீஸ் விவகாரத்தில் சுமார் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளியில் நடமாடும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்யவில்லை என்றும், தாங்களும் இதேபோல் மோசடி செய்யலாமா என போலீஸ் அனுமதிக்குமா எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், ஊடகவியலாளர்கள் தலையிட்ட பிறகே இந்த வீடு லீஸ் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Fraudசாலை மறியல்சென்னைலீஸ் மோசடிவீடு மோசடிவேளச்சேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆகஸ்டில் புதுச்சேரி சட்டமன்றம்: மீனவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
Next Article மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ – 24 நாட்களில் ரூ.330 கோடி வசூல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் 20க்கும் மேற்பட்டோரின் இலாகாக்கள் மாற்றப்பட…

ஆகஸ்ட் 20, 2026

டெல்லியில் எரிவாயு மையத்தில் வெடிவிபத்து: 3 பேர் பலி

டெல்லியில் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு…

ஆகஸ்ட் 20, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய வழிமுறைகள்: மத்திய அரசு தகவல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய…

ஆகஸ்ட் 20, 2026

பிஹார்: மதிய உணவில் சலவைத் தூள் – 36 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

பிஹார் மாநில அரசுப் பள்ளியில் மதிய உணவில்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சென்ற ரயிலில் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்தது

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நெல்லிக்காய் ஜூஸ்: உடல் எடை குறைப்பு முதல் நச்சு நீக்கம் வரை!

நெல்லிக்காய் ஜூஸின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்! உடல் எடை குறைப்பு, நச்சு நீக்கம், மலச்சிக்கல் தீர்வு என பல பயன்களை அளிக்கும் இந்த ஜூஸை மிதமான அளவில்…

1 Min Read
சமையல் எரிவாயு அடுப்பு பர்னர்
லைஃப் ஸ்டைல்

கேஸ் அடுப்பு எரிவது குறைகிறதா? 10 காரணங்கள் இதோ!

கேஸ் அடுப்பு எரிவது குறைகிறதா? பர்னர் துளைகளை பெரிதாக்கக் கூடாது, ஜெட் பகுதியை நீங்களே சுத்தம் செய்ய முயற்சிக்கக் கூடாது. இதற்கான காரணங்கள் மற்றும் சரியான தீர்வுகள்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரையில் ரூ.2500 அறிவிப்பு எங்கே? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஆளுநர் உரையில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் அறிவிப்பு இடம்பெறாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?